இந்த ஆண்டில் 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இனிமேல் வரவுள்ள Top Heros திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்துமா என பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் முன்னணி Heros படங்கள் மட்டுமல்ல, புதுமுக நடிகர்கள், இயக்குனர்கள் படங்கள் என தியேட்டர் மற்றும் OTT தளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டின் முதல் பாதியில் பெரியதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் வரவில்லை என்றாலும் கேப்டன் மில்லர், அரண்மனை 4, அயலான் போன்ற படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன.
பொங்கல், கோடை விடுமுறை காலகட்டத்தில் வந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும் ஒரு சில படங்கள் ரிலீஸ் செய்வதில் தாமதமானது. தமிழ் மொழி படங்கள் மட்டுமல்ல மற்ற மொழி படங்களும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டன. பெரும்பாலும் கோடை விடுமுறையில் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன.
தனுஷ் நடிப்பில் “கேப்டன் மில்லர்” படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டில் 2-வது படமாக “ராயன்” வெளிவரவுள்ளது. தனுஷ், சுதீப் கிருஷ்ணன், SJ. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெய்ராம், ஜெய்ராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி என நடிகர் பட்டாளமே நடித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் ஹாசன் சங்கர் கூட்டணியில் 2,3 ஆண்டுகளாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் “இந்தியன் 2“. சில காரணங்களால் தடைபட்டுக்கொண்டே வந்த படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. அண்மையில் இதன் ஆடியோ லன்ச் நடைபெற்றது. கமல், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங்க், பிரியா பவானி சங்கர் என பலரும் நடித்துள்ளனர். ஜூலை 12-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவர காத்திருக்கும் “GOAT” படம் செப்டம்பர் 5-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க அவ்வப்போது அப்டேட் தந்து விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் வெங்கட் பிரபு.
கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கும் “ராகு தாத்தா” படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியானது. வித்தியாசமான கதையை கொண்டு சுமன் குமார் இயக்கியுள்ளார். இந்த ஆண்டின் ஆகஸ்ட் 15-ல் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “வேட்டையன்” படம் ஓரளவு முடிவடைந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா என பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் மூலம் வெளியாகும் படம் அமரன். ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் மேஜர் முகுந்தன் உண்மை கதையை கொண்டு படமாக்கவுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் Brother, genie, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களும் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வரவுள்ளது.
விக்ரம் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம், பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் போன்ற படங்களும் வெளிவரவுள்ளது.

கார்த்தி நடிப்பில் மெய்யழகன், வா வாத்தியாரே போன்ற படங்களின் அப்டேட்கள் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து இந்த ஆண்டில் இறுதிக்குள் வெளியாகவுள்ளது.
விஜய் சேதுபதியின் மஹாராஜா, Ace, Train, விடுதலை 2 போன்ற படங்களும் வெளிவர காத்துக்கொண்டுள்ளன.
மணிரத்னம் கமல் காம்போவில் “Thug Life” படத்தில் நடிக்கும் நடிகர்கள் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்துள்ளது. படத்தின் கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், நாசர், ஐஸ்வர்யா லட்சுமி போன்றோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு வேலைகள் பாதி முடிவடைந்த நிலையில் 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான pushpa 1 படத்தை தொடர்ந்து pushpa 2 தி ரூல் படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.
சூர்யாவின் கங்குவா, அஜித்தின் விட முயற்சி போன்ற படங்களும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]