திரையில் காணும் வாய்ப்பு இல்லாத பல சினிமா ரசிகர்களின் மிக நெருங்கிய நண்பனாக மாறியுள்ளது “Netflix”. சென்ற ஆண்டு கோலிவுட் திரையுலகிற்கு ஏராளமான கலைநயமும், கமர்ஷியல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த ஆண்டு கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் முதல் அறிமுகமாக உள்ள புதுமுகங்கள் தொடங்கி ஏராளமான படங்கள் வெள்ளித்திரைக்கு வருகை தர உள்ளது. அப்படி Netflix நிறுவனத்தில் வருகை தரும் தமிழ் திரைப்படங்களின் பட்டியலை காண்போம்.
1.குட் பேட் அக்ளி
இந்த ஆண்டு பொங்கல் திருநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்ளி’ ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு காங்ஸ்டர் ஆக தோன்றவிருக்கிறார் அஜித். 200-270 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர்கள் த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையில் வெளியாகும் நாள் : ஏப்ரல் 10, 2025
Netflixல் வெளியாகும் மொழிகள் : தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி
2.விடாமுயற்சி
ஹோலிவுட்டில் 1997 ல் வெளியான “Breakdown” திரைப்படத்தின் ரீமேக் ஆன நடிகர் அஜித்தின் நடித்த மற்றொரு 2025 ஆம் ஆண்டு வெளியீடு “விடாமுயற்சி” ஆகும். இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிகை த்ரிஷா மற்றும் வில்லன் பாத்திரத்தில் அர்ஜுன் ஷார்ஜா நடித்திருப்பது இந்த படத்தின் சிறப்பு.
திரையில் வெளியாகும் நாள் : TBA
Netflixல் வெளியாகும் மொழிகள் : தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி
3.ரெட்ரோ
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மிரட்டலான காங்ஸ்டர் பாத்திரத்தில் வருகிறார் நடிகர் சூர்யா. படத்தின் முன்னணி கதாபாத்திரங்கள் இடம் பெற்ற சமீபத்தில் வெளியான டீசர் பாராட்டுகளைப் பெற்றது.
திரையில் வெளியாகும் நாள் : மே 1, 2025
Netflixல் வெளியாகும் மொழிகள் : தெலுங்கு, மலையாளம், கன்னடம்
4.பைசன்
மனதை உருக்கும் கதைகளை மக்களை கவரும் வகையில் திரைக்கதை அமைத்து ஒவ்வொரு முறையும் மக்களிடையே தனக்கான ஆதரவை அதிகரித்துக் கொள்ளும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “பைசன்” படத்தின் மூலம் முதல் முறையாக நடிக்கிறார் நடிகர் துருவ் விக்ரம்.
திரையில் வெளியாகும் நாள் : TBA
Netflixல் வெளியாகும் மொழிகள் : தெலுங்கு, மலையாளம், கன்னடம்
5.டிராகன்
இந்த தலைமுறையின் காதல் மற்றும் பண்புகளை தனது இயல்பான, நேர்த்தியான நடிப்பில் பாராட்டை குவித்த நடிகரும் இயக்குனரும் ஆன பிரதீப் ரங்கநாதனின் இரண்டாவது திரைப்படம் தான் “டிராகன்”.
திரையில் வெளியாகும் நாள் : பிப்ரவரி 2025
Netflixல் வெளியாகும் மொழிகள் : தெலுங்கு, மலையாளம், கன்னடம்
6.காந்தா
நடிகர் துல்கர் சல்மான், ராணா, பாக்யஸ்ரீ போர்ஷே ஆகியோர் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வரும் ‘காந்தா’ திரைப்படம் 1950களில் இருக்கும் மெட்ராஸ் நகரில் வாழும் கதாபாத்திரங்களின் கதை என கூறியிருக்கிறார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ். துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
திரையில் வெளியாகும் நாள் : TBA
Netflixல் வெளியாகும் மொழிகள் : தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி
7.பெருசு
சிங்கள மொழியில் வெளியான “டென்டிகோ/Tentigo” என்ற காமெடி திரைப்படம் இயக்கிய இளங்கோ ராம், தமிழில் இந்த திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளார் அதற்கு “பெருசு” என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் பிரபலம் அடைந்த நிஹாரிகா தமிழில் அறிமுகம் ஆகிறார் மேலும் இந்த படத்தில் வைபவ், சுனில், ரெடின் கிங்ஸ்லி, தீபா, பால சரவணன் ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திரையில் வெளியாகும் நாள் : 2025
Netflixல் வெளியாகும் மொழிகள் : தெலுங்கு, மலையாளம், கன்னடம்
8.தக் லைஃப்
37 வருடத்திற்கு பிறகு வெள்ளித்திரையில் இணைந்த நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் உருவான “தக் லைஃப்” இந்த வருடம் வெளியாகிறது. இந்த திரைப்படமும் வெள்ளித்திரைக்கு வருகை தந்த பிறகு Netflixல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
திரையில் வெளியாகும் நாள் : ஜூன் 5, 2025
Netflixல் வெளியாகும் மொழிகள் : தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]