ஆக்ஷன், த்ரில்லர், காதல் மற்றும் பயோபிக் போன்ற பலவிதமான படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தார் இயக்குனர் சுசீந்திரன்.
யார் இந்த 2K Love Story -ன் இயக்குனர்?
12 வருடங்கள் கடின உழைப்பில் சேகரித்த அனுபவத்தை வைத்து 2009-ல் “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆன சுசீந்திரன், தற்போது அறிமுக நடிகர் ஜகவீரை கதாநாயகனாக “2K Love Story” படத்தில் அறிமுகம் செய்கிறார்.
தனித்தன்மைக்கு சொந்தக்காரர்
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான தனித்துவமான கதைகள், சமூகத்தில் நிகழும் உண்மை நிகழ்வுகளை தனது கற்பனை கதையுடன் இணைத்து ஒரு புதுவிதமான படைப்பை அளிப்பதில் வல்லவர். அப்படி அவரின் எழுத்தில் உருவான ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வெற்றிப் படங்கள்,
- அழகர்சாமியின் குதிரை
- ஆதலால் காதல் செய்வீர்
- பாண்டிய நாடு
- ஜீவா
- பாயும் புலி
“2K Love Story”-க்கு முன், அவர் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான “குற்றம் குற்றமே” என்ற கிரைம் திரில்லர் திரைப்படத்தில் ஜெய், ஹரிஷ் உத்தமன், திவ்யா துரைசாமி மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். மர்மமான முறையில் நிகழும் ஒரு கொலை குறித்த விசாரணையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகளே இந்த படத்தின் மைய கதையாகும்.
2K Love Story

அதன் பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாக உள்ள, தற்போதைய 2K தலைமுறையின் காதலை வெளிக்காட்டும் வகையில் உருவாகியுள்ள “2K Love Story” திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த திரைப்படம் கார்த்திக் மற்றும் மோனிகா என்ற இரு 2K தலைமுறை இளைஞர்களின் காதல், மற்றும் அவர்களின் நட்பு அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து நகைச்சுவை, காதல் மற்றும் அவருக்கே உரித்தான திரைக்கதையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 13, 2024 அன்று திரையரங்கில் வெளியாக உள்ளது.
இயக்குனர் | சுசீந்திரன் |
நடிகர்கள் | ஜகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், GP முத்து |
இசை | D.இமான் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com