20-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு பயன்படுத்தக்கூடிய டெக்னாலஜி, வார்த்தைகளை 80-களில் தமிழ் சினிமாவிற்கு தந்து அற்புதம் செய்த படம் KAMAL-ன் விக்ரம் (1986).
தொலைநோக்கு சிந்தனைகளை தனது படங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் KAMAL-ன் பழைய படங்கள் அந்த காலகட்டத்தில் பெரிதாக ரசித்து கொண்டாடபடவில்லை என்றாலும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான படங்கள் எந்தவொரு டெக்னாலஜியும், லேட்டஸ்ட் கேமரா இல்லாமல் எடுத்து வந்தது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று தான்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளிவந்து பெரிதும் கொண்டாடப்பட்டது விக்ரம் படம். இதில் கமல் ரா-ஏஜென்ட் ஆக நடித்திருப்பார். தற்போதைய விக்ரம் படத்தின் தொடக்கம் 1986-ல் வெளிவந்த விக்ரம் படத்தின் கதையை கொண்டு தான் லோகேஷ் எழுதியிருப்பார்.
1986-ல் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கப்பட்டு, ராஜசேகர் இயக்கத்தில், சுஜாதா கதை எழுத, இளையராஜா இசையில் கமல், சத்யராஜ், லிஸி, டிம்பில் கபாடியா, சாருஹாசன், மனோரமா, அம்ஜத் கான், ஜனகராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் விக்ரம்(1986).
படத்தின் டைட்டில் கார்டில் KAMAL-ன் டான்ஸ் மற்றும் குரலில் “விக்ரம் விக்ரம்” என்ற பாடல் மூலம் படம் தொடங்குகிறது. இந்திய அரசின் ரா-ஏஜென்ட்டாக கமல் இருந்து வருவார். இந்திய அரசிற்கு சொந்தமான ஏவுகணை ஒன்றை சத்யராஜ் கடத்தி கொண்டு சென்று விடுவார். அது ஒரு நாட்டையே அழிக்கக்கூடிய அளவில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. அதனை சத்யராஜ் கும்பலிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற “மிஷன் அக்கினிபுத்ரா” வை கமலிடம் தர முடிவு செய்வார் ராவ். ஆனால் அதனை ஏற்க மறுத்து விடுவார் கமல்.

தன்னை பற்றி யாருக்கு தெரியாத நிலையில் தான் இருக்குமிடத்தை அறிந்து மனைவியை கொலை செய்தது யார் என்று தெரிந்து கொள்ள KAMAL முயற்சிப்பார். அதற்க்கு மிஷன் அக்கினிபுத்ராவை செய்து முடிக்க வேண்டும் என்று இந்திய அரசு தரப்பில் கமலிடம் கோரிக்கை வைப்பார்கள். இதற்கிடையே ஒருவர் மீது சந்தேகம் கமலுக்கு ஏற்பட அவரது வீட்டை கண்டு பரிசோதிக்கும்போது அந்த நபர் கமலிடம் மாட்டிக்கொள்வார். அவரை விசாரிக்கும் பொது சத்யராஜ் பெயரை மட்டும் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்வார். சுகிர்தராஜ் என்ற சத்யராஜ் பெயரைக்கொண்டு அவர் இருக்கும் இடத்தை எப்படி கண்டு பிடிப்பது என தெரியாமல் இருந்து வருவார் கமல் .
அந்த ஏவுகணை எங்கு உள்ளது என்று தெரியாது, அதனை 10 நாட்களுக்குள் கண்டு பிடிக்க வேண்டும் இல்லை என்றால் எதாவது ஒரு நாட்டில் சென்று தானாக வெடித்து விடும் என்ற வகையில் ப்ரோகிராம் செய்யப்பட்டிருக்கும். இந்த மாதிரியான சவாலான சூழ்நிலையில் கமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வருகிறார். அப்போது ஏவுகணை ப்ரோகிராம் செய்ய உதவியாக இருந்த லிஸியை அறிமுகப்படுத்தி வைப்பர் ராவ். கமல் மற்றும் லிஸி இருவரும் தற்கொலை செய்து கொண்ட நபரின் வீட்டிற்கு சென்று சுகிர்தராஜ் பற்றி எதாவது தகவல் கிடைக்குமா என செல்வார்கள்.
இருக்கும் தடையங்களை சுகிர்தராஜ் ஆட்கள் எரித்து விட்டு தப்பித்து விடுவார். அவரை பிடிக்க முயற்சிக்கும்போது சுகிர்தராஜ் பற்றிய ஒரு தகவல் கமலுக்கு கிடைக்க வரும். சுகிர்தராஜ் சலாமிய என்ற நாட்டில் இருப்பதாக தெரிய வருகிறது. அங்கு சென்று மிஷன் அக்கினிபுத்ராவை செயலிழக்க செய்வது தான் மீதி கதை.
இந்த படத்தில் தற்போது பயன்படுத்தக்கூடிய டெக்னாலஜி போன்று computer, துப்பாக்கி, மிஷன் gun போன்றவற்றை பயன்படுத்தியது ஆச்சரியமான ஒன்று. கம்ப்யூட்டரின் பயன்பாட்டை அறியாத காலத்தில் அதனை படத்தில் காட்ட வேண்டும் என்ற KAMAL-ன் யோசனை பாராட்ட வேண்டிய ஒன்று தான்.
“வா யா விக்ரம்”, “இப்படி பொசுக்கு பொசுக்குன்னு மாட்டிக்கிறயே”, சத்யராஜ்யின் நக்கல் பேச்சும், எதார்த்த நடிப்பும் ரசிக்க வைக்கும். சண்டை காட்சிகளும் பெரிதும் ரசிக்கக்கூடிய அளவில் இருந்தது. இளையராஜாவின் இசையில் டைட்டில் சாங், பின்னணி இசை என படம் முழுவதும் அசத்தியிருப்பார்.
தற்போதைய டெக்னாலஜி உலகில் மிஷன், ரா-ஏஜென்ட், சூப்பர் கம்ப்யூட்டர் என்ற வார்த்தைகள் சாதாரணமான ஒன்று. ஆனால் இந்த படத்தில் “மிஷன் அக்கினிபுத்ரா” என்ற வார்த்தை அன்றைய காலகட்டத்தில் புதிதான ஒன்றுதான். அதனால் படத்தில் பெரும்பாலும் “ஏவுகணை” என்றுதான் கூறியிருப்பார்கள்.

சலாமிய என்ற புது நாட்டை இந்த படத்திற்க்காக உருவாக்கி அதில் பேசும் மொழி என்று புது விதமான முயற்சியை செய்திருப்பார்கள். பல புதுமைகளை கொண்டு 20 வருடங்களுக்கு பிறகு எடுக்கும் படத்தை அன்றைய காலகட்டத்தில் தந்து அசத்தியுள்ளார்.
எந்த விசயமாக இருந்தாலும் சரி அதனை ஆராய்ந்து தெரிந்து கொள்ளும் KAMAL இந்த படத்துக்காக ஏவுகணை பற்றியும், சூப்பர் கம்ப்யூட்டர் பற்றியும் அறிந்து கொண்டு கமலும், சுஜாதாவும் அற்புதம் செய்துள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]