Home Cinema News 69வது தென்னிந்திய Filmfare விருதுகள் 2024 – வெற்றியாளர்கள் பட்டியல்!

69வது தென்னிந்திய Filmfare விருதுகள் 2024 – வெற்றியாளர்கள் பட்டியல்!

2024ன் தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுக்கான Filmfare விருதுகள் விழா நடந்தது. அதில் விருது வென்றவர்களின் பட்டியல்.

by Vinodhini Kumar

ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சாதித்த திரை நட்ச்சத்திரங்களை கவுரவிக்கும் விழாக்களில் முக்கியமானது Filmfare விருதுகள். தென்னிந்திய சினிமா துறைகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் திரைத்துறையில் பாராட்டத்தக்க திறமைகளை கவுரவிக்கும் விதமாக ஆகஸ்ட் 3ம் தேதி நடந்தேறியது 69வது தென்னிந்திய Filmfare விருதுகள் 2024.

Siddharth and SU Arun Kumar

ஹைதெராபாதில் நடந்த இந்த 69வது தென்னிந்திய Filmfare விருதுகள் நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர்கள் அனைவரும் ஒன்றுகூடி விருதுகளை அள்ளிச்சென்றனர். பல துறையில் சாதித்த நட்சத்திரங்கள் மற்றும் திரை கலைஞர்கள் விருதுகளை வென்றனர்.

விருதுவிருது பெற்றவர்படம்
சிறந்த படம்சித்தார்த்சித்தா
சிறந்த இயக்குனர் எஸ் யு அருண்குமார்சித்தா
சிறந்த நடிகர்விக்ரம்பொன்னியின் செல்வன் – 2
சிறந்த நடிகைநிமிஷா சஜயன்சித்தா
சிறந்த நடிகர் (Critics) சித்தார்த் சித்தா
சிறந்த நடிகை (Critics)ஐஸ்வர்யா ராஜேஷ் & அபர்ணா தாஸ்ஃபர்ஹனா & டாடா
சிறந்த படம்வெற்றிமாறன் விடுதலை பாகம் – 1
சிறந்த துணை நடிகர்ஃபகத் ஃபாசில்மாமன்னன்
சிறந்த துணை நடிகைஅஞ்சலி நாயர்சித்தா
சிறந்த பாடலாசிரியர்இளங்கோ கிருஷ்ணன்அகநக (பொன்னியின் செல்வன் – 2)
சிறந்த பின்னணி பாடகர்ஹரிச்சரன் சின்னஞ்சிறு நிலவே (பொன்னியின் செல்வன் – 2)
சிறந்த பின்னணி பாடகிகார்த்திகா வைத்தியநாதன் கண்கள் ஏதோ (சித்தா)
சிறந்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் பொன்னியின் செல்வன் – 2
சிறந்த திரை இசை பாடல்கள்திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன்சித்தா
சிறந்த திரைப்பட தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி பொன்னியின் செல்வன் – 2

எஸ் யு அருண் குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த ‘சித்தா‘ படம் 7 விருதுகளை வென்றது. நடிகர் சித்தார்த் சிறந்த நடிகருக்கான Critics விருதை பெற்றார். சிறந்த நடிகையயாக நிமிஷா சஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த துணை நடிகையாக இந்த படத்தில் சித்தார்த்தின் அண்ணியாக நடித்த அஞ்சலி நாயர் விருதை வென்றார். சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரை இசை பாடல்கள், சிறந்த பாடகி போன்ற விருதுகளை 69வது தென்னிந்திய Filmfare விருதுகள் விழாவில் குவித்தது இந்த படக்குழு. 

Art Director Thota Tharani wins in 69வது தென்னிந்திய Filmfare விருதுகள்
தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி Source: Filmfare X

அடுத்ததாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் – 2 படம் 5 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. 

‘Viduthalai 2’ படத்தை மீண்டும் ரீ ஷூட் செய்கிறாரா வெற்றிமாறன்!!

சிறந்த படமாக வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1‘ தேர்ந்தெடுக்கப்பட்டது.  

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.