ஒவ்வொரு ஆண்டும் இந்தியளவில் குறிப்பிட்ட வருடத்தில் வெளியான படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து அந்த திறமையாளர்களை அடையாளப்படுத்தி விருதுகள் வழங்கப்படும். இந்தியாவில் உள்ள உயரிய திரைப்பட விருதுகளில் தேசிய விருதுகளுக்கு தனி இடம் உண்டு.
இந்தியா முழுவதும் பல மொழிகளில் எடுக்கப்படும் ஆயிரக்கணக்கான படங்களில் 2022ம் ஆண்டு வெளியான படங்களில் தனித்துவமான நடிப்பு, வியக்கவைக்கும் இயக்கம், மயக்கும் இசை என பல துறைகளில் சிறப்பான திறமைகளை கவுரவிக்கும் விதமாக இன்று புது டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார்.
2022 ஆம் ஆண்டுக்கான 70 வது தேசிய விருதுகள் அறிவிப்பு…’பொன்னியின் செல்வன் 1′-க்கு 4 விருதுகள்!!
70 வது தேசிய விருதினை வென்ற தமிழ் திறமையாளர்கள்
சிறந்த நடிகை – நித்யா மேனன்
#WATCH | On winning the National Award for Best Actress in Leading Role for the 2022 film Thiruchitrambalam, actor Nithya Menen says, "It feels wonderful and is very special. It is a very important moment in our lives as artists… I would like to dedicate the award to my… pic.twitter.com/iqXCaAi9zw
— ANI (@ANI) October 8, 2024
Source: X (ANI)
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அழகான இயல்பான கதையாக உருவான படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தாலும், மக்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரம் தான் ‘ஷோபனா’. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இப்படியொரு பெண் தோழி கிடைக்கவேண்டும் என்ற ஆசைப்பட வைக்கும் அளவிற்கு ஒரு பெண் தோழியின் கதாபாத்திரத்தை, நிஜ வாழ்க்கையை போலவே திரையில் காட்டியிருப்பார் நடிகை நித்யா மேனன்.
சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன்
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுத்து, இரண்டு பாகங்களாக இயக்கி 2022ல் பொன்னியின் செல்வன் 1 படத்தை வெளியிட்டனர். இப்படத்தில் இயக்கம், இசை எவ்வளவு ப்ரம்மிப்பாக இருந்ததோ, அதை விட படத்தின் ஒளிப்பதிவும் படத்தை மெருகேற்றியது. ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் கேமராவில் இப்படத்தின் பல காட்சிகள் திகைப்பாய் அமைந்தது. இவரை 70வது தேசிய விருதுகள் விழாவில் கவுரவித்தது இந்திய அரசு.
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – ஏ ஆர் ரஹ்மான்
ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் 1 படத்தின் பாடல்களை போலவே பின்னணி இசையும் அருமையாக அமைந்தது. இந்த ஆண்டு தேசிய விருது பெரும் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு இது 7வது தேசிய விருதாகும். இப்படத்தின் அறிவிப்புடன் வெளியான ‘பொன்னி நதி பாக்கணுமே’ பாடல் கொடுத்த உத்வேகத்தில் மக்கள் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி தீர்த்தனர்.
சிறந்த தமிழ் படம் – பொன்னியின் செல்வன் 1
A proud moment as our Chairman Subaskaran and Director Mani Ratnam receive the National Award for Ponniyin Selvan-1. 🏆 Their vision and efforts brought this epic tale to life, honoring Tamil heritage on this prestigious stage. 🌟#ManiRatnam @arrahman @MadrasTalkies_… pic.twitter.com/9DhGDPqrBE
— Lyca Productions (@LycaProductions) October 8, 2024
பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக மாற்றும் முயற்சி பல ஆண்டுகளாக நடந்த நிலையில், இயக்குனர் மணிரத்னம் முன்னின்று Lyca நிறுவனத்துடன் ஒரு பிரம்மாண்ட காவியத்தை திரையில் வெளியிட்டனர். பொன்னியின் செல்வன் பாகம் 1, 2022ல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வல்வேற்ப்பு கிடைத்தது. இந்த படம் தான் 2022ன் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது. இந்த விருதை இயக்குனர் மணிரத்னம் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பெற்றுக்கொண்டனர்.
சிறந்த ஒலி வடிவமைப்பு – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி
70வது தேசிய விருதுகள் நிகழ்வில் பொன்னியின் செல்வன் 1 படம் அதிக விருதுகளை தட்டி சென்றது குறிப்பிடத்தக்க தகவலாக இருப்பதை போல, சிறந்த ஒலி வடிவமைப்பாளர் விருதை வென்ற ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பற்றியும் குறிப்பிட சுவாரசியமான ஒரு தகவல் உண்டு. 1995ல் வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘சாதி லீலாவதி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, இப்போது நிஜமாகவே வளர்ந்து ஒரு தலைசிறந்த திறமையாளராக உருவெடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் 1 படத்தின் பிரம்மாண்டமான இசை வடிவமைப்பில் இவரின் பங்கு பெரியது.
சிறந்த நடன இயக்குனர் – சதிஷ் கிருஷ்ணன்
திருச்சிற்றம்பலம் படத்தில் உள்ள ‘மேகம் கருக்காதா’ பாடலை இயக்கிய நடனக்கலைஞர் சதிஷ் கிருஷ்ணன், பல ஆண்டுகளாக நடன துறையிலும் சினிமா துறையிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, இப்போது தேசிய விருது பெற்றுள்ளார். இவருடன் இந்த விருதுக்கு இணைந்து பரிந்துரைக்கப்பட்டு, விருது பெறுவதாக இருந்த நடன கலைஞர் ஜானி, சமீபத்தில் உடன் பணியாற்றிய பெண் நடன கலைஞரை பாலியல் கொடுமை செய்ததால், அவரின் தேசிய விருது மறுக்கப்பட்டுள்ளது.