Home Cinema News ‘தலைவர் 171’-ல் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டப்போகிறாரா 80ஸ் ஹீரோ?

‘தலைவர் 171’-ல் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டப்போகிறாரா 80ஸ் ஹீரோ?

தலைவர் 171'-ல் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டப்போகிறாரா 80ஸ் ஹீரோ?

by Sivaanantham RB


கோலிவுட்டின் டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ‘வேட்டையன்‘ மற்றும் ‘தலைவர் 171‘ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

main qimg 4f410e396985da5020b3c4266de992d1 lq

இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஷோபனா ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், கெஸ்ட் ரோலில் பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான் அல்லது ரன்வீர் சிங் இருவரில் ஒருவர் நடிக்கப்போகிறார்.

அனிருத் இசையமைக்கும் இதற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யப்போகிறார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் டீசரை வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்க 80ஸ் ஹீரோ மைக் மோகனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திலும் மைக் மோகன் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.