Home Cinema News சுந்தர்.c யின் ‘அரண்மனை 4’ படத்தின்க்ளைமேக்ஸ்பாடலில் நடனமாடிய 90ஸ் நடிகைகள்!

சுந்தர்.c யின் ‘அரண்மனை 4’ படத்தின்க்ளைமேக்ஸ்பாடலில் நடனமாடிய 90ஸ் நடிகைகள்!

by Naveen Dhayalan

பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கி, நடித்த ‘அரண்மனை‘ யின் மூன்று பாகங்கள் வெளிவந்து ஹிட்டானதால், இப்போது நான்காம் பாகத்தை எடுத்து முடித்திருக்கிறார். இதில் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர்.

GJqyssNW0AAXT K

மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், டெல்லி கணேஷ், சந்தோஷ் பிரதாப், நமோ நாராயணன், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, விச்சு விஸ்வநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார், ஈ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

முதல் மூன்று பாகங்களை போல் இதுவும் ஹாரர் காமெடி ஜானரில் ஆடியன்ஸை திகிலூட்டுவதுடன், சிரிக்கவும் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் க்ளைமேக்ஸ் பாடலில் பிரபல 90ஸ் நடிகைகள் சிம்ரனும், குஷ்பூவும் சேர்ந்து நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.