Home Cinema News கதாநாயகிகளை கொண்டாடும் Evergreen Heroine ஹிட் பாடல்கள்!

கதாநாயகிகளை கொண்டாடும் Evergreen Heroine ஹிட் பாடல்கள்!

Evergreen பாடல்கள் என்று சொல்லப்படும் பாடல்களில் Heroineகளின் அறிமுக பாடல்களுக்கு தனி இடம் உண்டு.

by Vinodhini Kumar

தமிழ் படங்களில் ஹிட்டான Evergreen Heroine பாடல்கள்! 

Evergreen பாடல்கள் என்று சொல்லப்படும் பாடல்களில் Heroineகளின் அறிமுக பாடல்களுக்கு தனி இடம் உண்டு. ஒரு படத்தின் தொடக்கத்தில் அந்த படத்தின் கதை எங்கு நடக்கிறது, என்ன நடந்தது, எப்போது நடக்கிறது என்பதெல்லாம் அறிவிப்பது ஒரு பக்கம் இருக்க, அந்த படத்தின் ஹீரோயினுக்கான அறிமுக பாடலுக்கு தனி ரசிகர்கள் உண்டு.

70, 80களில் ஒரு படத்தின் நாயகி இவர் தான் என்று அறிவது பின்னணி இசையை வைத்து தான். ஹீரோ ஒரு பெண்ணை பார்த்து காதலால் விழும்போது பின்னணி இசை வழியாக அந்த சந்திப்பை மக்கள் அறிந்துக் கொண்டார்கள். பின்னர் 90களில் படத்தின் Heroine’க்கு தனியாக பாடல்கள் எழுதப்பட்டு பிரபலமானது. அப்படி தமிழ் சினிமாவின் பிரபலமான Evergreen Heroine அறிமுக பாடல்களின்‌ பட்டியல் இது.

குஷி- ஜோதிகா

Jyothika

குஷி படத்தை பற்றி எப்போது பேசினாலும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத Evergreen Heroine பாடல்- “மேகம் கருக்குகுது…மின்னல் சிரிக்குது”. தன் படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பும் கதாநாயகி அருவியில் ஆடி பாடி ஆனந்தமாய் இருப்பதாக எழுதப்பட்ட பாடல். கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள், ஜோதிகாவின் நடனம், பாடகி ரஜினியின் குறள், கோரஸ் என துள்ளலான மறக்கமுடியாத பாடலாக நடிகை ஜோதிகாவிற்கு மாறியது. 

கில்லி- த்ரிஷா

Trisha Intro song

ரீ‌‌ ரிலீஸ் கலாச்சாரத்தால் பிரபலமான மற்றுமொரு Evergreen Heroine பாடல் – “ஷாலாலா ஷாலாலா…இரட்டை வால் வெண்ணிலா”. கிராமத்து இளம்பெண் குறும்பான துறுதுறுவென எழுதப்பட்ட பாடல். கவிஞர் நா. விஜயின் பாடல் வரிகளில் சுனிதி சவுகனின் அழகிய தமிழில் பாடிய பாடல் இன்றும் கேட்பதற்கு இனிமையாக அமைந்துள்ளது. 

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – ஐஸ்வர்யா ராய்

Aishwarya Rai Kandukondein Kandukondein

கதையில் இரண்டு நாயகிகள், இருவரும் வெவ்வேறு துருவங்கள். பல கனவுகளுடன், கவிதை படித்து கற்பனையில் வாழும் பெண் பாடும் பாடல்- “கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே”. கவிஞர் வைரமுத்துவின் நம்பிக்கை ஊட்டும் வரிகளில் சாதனா சர்கம் பாடியது அந்த கொஞ்சும் குயில் போலவே இன்றும் Evergreen Heroine பாடலாக புதிதாகவே இருக்கிறது. 

மின்சார கனவு – கஜோல்

தோழிகளுடன் ஒரு பயணம், வழியெல்லாம் அழகிய மலைகள். பாடலின் முதல் வரியில் இருந்து மலைகளில் நாமும் பயணிப்பது போல்‌ இருக்கும்- “பூ பூக்கும் ஓசை, அதை கேட்க தான் ஆசை”. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பல தேசிய விருதுகள் பெற்ற படம், இளம் பெண்கள் மனதில் ஒரு நெடிய பயணத்தின் ஆசையை தூண்டும் வகையில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். 

ரோஜா – மதுபாலா

Roja poster

கள்ளக் படம் இல்லாத, சேட்டைகள் செய்யும் கிராமத்து இளம்பெண். அவளின் கதையின் தொடக்கத்தில் எல்லா பெண்களுக்கும் உள்ள “சின்ன சின்ன ஆசை” பாடி, அவரது எழுத்தால் கட்டி போட்டவர் கவிஞர் வைரமுத்து. மின்மினியின் குறளின் இனிமை, கேட்க கேட்க சுகம். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.