கோலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆதி. இவர் நடிப்பில் ரெடியாகி வரும் புதிய ஹாரர் த்ரில்லர் படம் ‘சப்தம்’. இந்த படத்தை ‘ஈரம்’ புகழ் அறிவழகன் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் சிம்ரன், லைலா, லக்ஷ்மி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இதற்கு தமன்.எஸ் இசையமைத்துக் கொண்டிருக்கிறார், அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாபு ஜோசப் VJ படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
With ears wide open and hearts pounding, here’s the #Sabdham teaser surely be an exhilarating experience, leaving you yearning for more💥Teaser Out now✨
— Aadhi🎭 (@AadhiOfficial) April 12, 2024
Link- https://t.co/HF6c1BdBkU (Tamil) https://t.co/lmYb33cL86 (Telugu)
An @dirarivazhagan Film
A @MusicThaman Musical pic.twitter.com/ecd6poq2c8
இதனை ‘7G ஃபிலிம்ஸ் – ஆல்பா ஃப்ரேம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துக் கொண்டிருக்கிறது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகுகிறதாம்.
தற்போது, இதன் டீசரை நடிகர் அருண் விஜய்யும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]