தனது மனைவியை விவாகரத்து செய்வதாக 9ம் தேதி நடிகர் ஜெயம் ரவி அறிவித்தார். தங்களின் 15 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், “நீண்ட கால் யோசனை மற்றும் பல பரிசீலனைக்கு பிறகு எனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விளக்குகிறேன்” என அறிவித்தார்.
இன்று அவரின் மனைவி ஆர்த்தி ரவி, தன்னுடைய தரப்பில் இருந்து ஒரு நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். அதில் “எனது கணவருக்கும் எனக்குமான விவாகரத்து செய்தி அதிர்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தி செய்து என்னுடைய ஒப்புதல் இல்லாமலும், தெரியாமலும் வெளியிடப்பட்டதாகவும் ,18 வருட உறவை மரியாதை மற்றும் தனியுரிமையுடன் கையாளப்படவேண்டும் என அவர் வெளியிட்ட நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
என் கணவரிடம் மனம் விட்டு பேசவும், சந்திக்கவும் சமீபகாலத்தில் பல முறை முயற்சித்தேன் என கூறிய ஆர்த்தி ரவி, அவரும் அவர்களின் குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம் என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இனையதளத்தில் ஆர்த்தி ரவியை பற்றிய விமர்சனகளும்,அவரின் நடத்தை மீது களங்கம் விளைவிக்கும் வகையில் பேசப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக தான் இப்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளாராம். தனிப்பட்ட விவகாரங்களை பொதுவெளியில் பேசுவதில் விருப்பமில்லை எனவும் ஆவர் தெரிவித்தார்.
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதையடுத்து, இந்த செய்தி அவர்களை காயப்படுத்தும் என்றும், ஒரு தாயாக தன்னுடைய மகன்களின் எதிர்காலத்தை முதன்மையாக பார்க்கிறேன் என ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய விருப்பம் இல்லாமல் விவாகரத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து, நேற்று நடிகர் ஜெயம் ரவி குடும்ப னால நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இன்று வெளியிடப்பட்ட நோட்டீஸில் கூட ஆர்த்தி ‘ரவி’ என்று தான் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.
இதுவரை 2024ல் நிறைய திரையுலக விவாகரத்துகள் நடந்தாலும், அதில் இருதரப்பினரும் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவாக தான் இருந்தது. முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவி மீது ஆர்த்தி குற்றச்சாட்டு வைத்துள்ளது அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]