நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ருக்மிணி வசந்த் நடிப்பில், உருவாகி வரும் புதிய படம்தான் ACE. இந்த படத்தை இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், நகைச்சுவை மற்றும் தற்போது முன்னணி நடிகராக நடித்து வரும் நடிகர் யோகிபாபு நடித்துள்ளார்.
தற்போது, இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘உருகுது உருகுது’ பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் காதலின் இனிமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு மெலோடி பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலைப் பிரபலப் பாடகர்கள் ஷ்ரேயா கோஷல் மற்றும் கபில் கபிலன் பாடியுள்ளனர். இவர்களின் மெல்லிய இன்னிசை குரலுடன் ‘உருகுது உருகுது’ பாடல் உணர்வுப்பூர்வமாகவும் மனதை வருடும் விதமாகவும் அமைந்துள்ளது.
‘Dear Comrade’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்களில் மெலோடி பாடல்களை இசையமைத்தும், பாடல்களை எழுதியுமுள்ள இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், பாடலாசிரியர் தாமரையின் வரிகள் காதலின் தேடல், அழகிய காதல் தவிப்பு என உணர்வுப்பூர்வமாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் அமைத்துள்ளது.
Read More: அக்கவுண்டன்ட் முதல் ‘மகாராஜா’ வரை- Vijay Sethupathiயின் பயணம்!
இந்த ‘உருகுது உருகுது’ பாடல் காதலர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. காதலின் பரவசத்தையும், ஒருவரை ஒருவர் நினைத்து ஏங்கும் அந்த உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ள இந்தப் பாடல், இசை ரசிகர்களிடையே விரைவில் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]