சினிமாவில் தான் நடித்த படங்களின் மூலம் நாட்டுப்பற்றையும், நாட்டிற்காக பாடுபட்டு தியாகம் செய்யும் சிலரது அர்ப்பணிப்பையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமான படைப்புகளை தந்தவர் Arjun.
கன்னட நடிகர் சக்தி பிரசாத் மற்றும் லட்சுமி ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் Arjun. ஸ்ரீனிவாச சர்ஜா என்ற பெயரில் வளர்ந்த அர்ஜுன் சிறு வயதில் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று நினைத்தார். மேலும் புரூஸ் லீ படத்தை பார்த்து கராத்தே மீது ஆர்வம் கொண்டு தனது 16-வது வயதில் கராத்தே பயிற்சியைத் தொடங்கினார். நன்கு பயிற்சி பெற்று பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.

கன்னட நடிகரான சக்தி பிரசாத், தனது மகன் அர்ஜுன் நடிகராக வருவதை விரும்பவில்லை. பின்னர் திரைப்பட தயாரிப்பாளர் ராஜேந்திர சிங் பாபு சக்தி பிரசாத்திடம் அனுமதியின்றி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க அர்ஜுனை ஒப்பந்தம் செய்தார். பின்னர் வேறு வழியின்றி சினிமாவில் நடிக்க ஒப்புக்கொண்டார் அர்ஜுனின் தந்தை.
பின்னர் கன்னட சினிமாவில் நடித்து வந்த Arjun முதன் முதலில் ராம நாராயணன் இயக்கத்தில் வெளியான நன்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் நாகம், இளமை, வேஷம் போன்ற படங்களில் நடித்தார்.
தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடித்து வந்தார். 1986 முதல் தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழியில் பிஸியாக நடிக்க தொடங்கினார். 1993-ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் அர்ஜுன் சினிமா வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
மருத்துவத்தில் நடைபெறும் ஊழலை வெளிப்படுத்தும் விதமாக தப்பான அரசியல்வாதிகள், அரசாங்கத்திடம் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் பள்ளி, கல்லூரி,மருத்துவமனை போன்றவற்றை காட்டுவார். இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டது.

அதன் பின்னர் தான் எழுதி, இயக்கிய படமான ஜெய்ஹிந்த் படத்தில் மூலம் நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக சிறப்பாக நடித்திருந்தார். இது இவரது கரியரில் மற்றுமொரு மாஸ்டர் பிஸ் படமாக அமைந்தது.
பெரும்பாலும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் “தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்” என்ற பாடல் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த் படத்தில் வரும் பாடல்.
படத்தில் சண்டை காட்சிகளின் போது ஒரு விதமான தனித்துவ ஸ்டைல் செய்து வில்லன்களை அடிப்பது ரசிக்கும் படியாக இருக்கும். இதனாலே இவர் ஆக்சன் கிங் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் காமெடியில் கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்கும்போது ரசிக்க வைத்திருப்பார். ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், மேட்டுப்பட்டி மிராசு, சாது, ஆயுதபூஜை போன்ற படங்களில் இவர்களது காம்போ ரசிக வைத்திருக்கும்.
குருதிப்புனல் படத்தில் கமலுடன் அப்பாஸ் IPS கேரக்டரில் கலக்கியிருப்பார். அதை தொடர்ந்து சங்கரின் முதல்வன் படத்தில் கேரக்டருக்கு தகுந்தாற்போல நடிப்பில் கலக்கியிருப்பார். முதல்வராக ரகுவரன் அவர்களை பேட்டியெடுக்கும் காட்சி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒருநாள் முதல்வராக நடிக்கும் காட்சி, மக்களின் வேண்டுகோளை ஏற்று அரசியலுக்கு வரும் காட்சிகளில் மெய்சிலிர்க்க வைத்திருப்பார்.
கண்ணோடு காண்பதெல்லாம், ரிதம், வானவில் போன்ற காதல் கதையை மையப்படுத்தி எடுத்த படங்களிலும் ரசிக்கும் படியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஏழுமலை படத்தில் வரும் அர்ஜுன் கேரக்டரின் BGM 90’S கிட்ஸ் -களுக்கு ஒரு ஹீரோ எப்படி மாஸ் ஆக இருக்க வேண்டும் என்றும், கண் பார்வையிலேயே எதிரிகளை பயமுறுத்தும் தோற்றம் கொண்டு மிரட்டியிருப்பார்.
அதைத்தொடர்ந்து கிரி படத்தில், காமெடி, ஆக்சன், செண்டிமெண்ட் என அனைத்திலும் ரசிக்க வைத்திருப்பார். அர்ஜுன், வடிவேலு காம்போ சூப்பர் ஹிட் ஆனது. வடிவேலுவின் பேக்கரி காமெடி இன்றும் ரசிக்க வைக்கும். அதை தொடர்ந்து மருதமலை படத்திலும் இவர்களது காம்போ சூப்பர் டூப்பர் ஹிட் என்றே சொல்லலாம்.
சாதாரண போலீஸ் ஆக இருக்கும் போது வடிவேலுவிடம் அமைதியாகவும், சாதுவாகவும் இருந்து வந்த அர்ஜுன் இன்ஸ்பெக்ட்டர் ஆக மாறி வடிவேலுவை செய்யும் காட்சிகள் சிரிப்பின் உச்சக்கட்டம்.
அஜித்குமாரின் 50-வது படமான மங்காத்தாவில் ACP பிரித்திவிராஜ் கேரக்டரில் அஜித்திற்கு இணையான ரோலில் நடித்து கலக்கியிருப்பார். படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வரை ட்விஸ்ட் வைத்து அர்ஜுன் கேரக்டரை கிளைமேக்ஸ் காட்சியில் வெளிப்படுத்தியது ரசிகர்களால் ரசித்து கொண்டாடப்பட்டது.
விஜய் ஆண்டனியின் கொலைகாரன் படத்திலும் ரசிக்கும் படியான நடிப்பில் கலக்கியிருப்பார். லியோ படத்தில் விஜய்யின் அண்ணன் ஹரோல்ட் தாஸ் கேரக்டரில் தனது ஆக்சன் பாணியில் ரசிக்க வைத்திருப்பார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என சினிமாவில் தன்னை நிரூபித்த அர்ஜுன் தீவிர ஆஞ்சிநேய பக்தர். தனது சொந்த செலவில் ஆஞ்சிநேயர் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்.
தற்போது இவர் விடா முயற்சி படத்தில் நடித்து வருவதால் படக்குழு இவரது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
Happy Brithday to the Action King @akarjunofficial 🎉 Your power-packed roles and relentless spirit light up the screen. Wishing you a year filled with lots of success and happiness. 🤗#HBDArjun #Arjun #VidaaMuyarchi pic.twitter.com/Kfefwz3qlC
— Lyca Productions (@LycaProductions) August 15, 2024
ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான சில முக்கிய படங்கள் லிஸ்ட்.
படங்கள் | வெளியான தேதி | நடிகர்கள் | இயக்குனர்கள் |
நன்றி | 17 ஆகஸ்ட் 1984 | கார்த்திக், நளினி, மஹாலட்சுமி, அர்ஜுன் | ராமநாராயணன் |
நாகம் | 23 பிப்ரவரி 1985 | அம்பிகா, ராதா ரவி, சந்திரசேகர், அர்ஜுன் | சோழ ராஜன் |
இளமை | 29 ஏப்ரல் 1985 | அர்ஜுன், ஆனந்த் பாபு, ஜீவிதா | ராமநாராயணன் |
தாய்மேல் ஆணை | 13 ஏப்ரல் 1988 | அர்ஜுன், ரகுவரன், சரோஜா தேவி, ரஞ்சினி | L. ராஜா |
தங்கைக்கு ஒரு தாலாட்டு | 23 நவம்பர் 1990 | அர்ஜுன், சீதா, KR. விஜயா | மதங்கன் KS |
சேவகன் | 5 ஜூன் 1992 | அர்ஜுன், குஷ்பு, நாசர்,வெண்ணிறாடை மூர்த்தி, செந்தில் | அர்ஜுன் |
ஜென்டில்மேன் | 30 ஜூலை 1993 | அர்ஜுன், மதுபாலா, சுபஸ்ரீ, செந்தில், கவுண்டமணி | சங்கர் |
ஜெய்ஹிந்த் | 20 மே 1994 | அர்ஜுன், ரஞ்சிதா, செந்தில், கவுண்டமணி, மனோரமா | அர்ஜுன் |
கர்ணா | 14 ஏப்ரல் 1995 | அர்ஜுன், ரஞ்சிதா, வினிதா, செந்தில், கவுண்டமணி | செல்வா |
குருதிப்புனல் | 23 அக்டோபர் 1995 | கமல்ஹாசன், அர்ஜுன், கௌதமி, கீதா, நாசர் | PC. ஸ்ரீராம் |
ஆயுதபூஜை | 24 நவம்பர் 1995 | அர்ஜுன், ஊர்வசி, ரோஜா, கவுண்டமணி, நாகேஷ் | சிவகுமார் |
செங்கோட்டை | 19 ஏப்ரல் 1996 | அர்ஜுன், மீனா, ரம்பா, விஜயகுமார் | CV. சசிகுமார் |
ரிதம் | 15 செப்டம்பர் 2000 | அர்ஜுன், மீனா, ஜோதிகா, ரமேஷ் அரவிந்த், லட்சுமி | வசந்த் |
முதல்வன் | 7 நவம்பர் 1999 | அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், லைலா, மணிவண்ணன் | சங்கர் |
வேதம் | 22 ஆகஸ்ட் 2001 | அர்ஜுன், சாக்ஷி சிவனந்த், வினித், மும்தாஜ், கவுண்டமணி | அர்ஜுன் |
ஏழுமலை | 21 ஜூன் 2002 | அர்ஜுன், சிம்ரன், விஜயகுமார், கஜாலா, மும்தாஜ் | அர்ஜுன் |
கிரி | 1 அக்டோபர் 2004 | அர்ஜுன், தேவயானி, ரம்யா, ரீமா சென், வடிவேலு, | சுந்தர் C |
மருதமலை | 7 செப்டம்பர் 2007 | அர்ஜுன், மீரா சோப்ரா, வடிவேலு, லால், ரகுவரன் | சுராஜ் |
மங்காத்தா | 31 ஆகஸ்ட் 2011 | அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், அஞ்சலி, பிரேம்ஜி | வெங்கட் பிரபு |
கொலைகாரன் | 7 ஜூன் 2019 | விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், சீதா | ஆண்ட்ரூ லூயிஸ் |
லியோ | 19 அக்டோபர் 2023 | விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, கெளதம் வாசு தேவ் மேனன், மடோனா | லோகேஷ் கனகராஜ் |
விடா முயற்சி | 31 அக்டோபர் 2024 | அஜித்குமார், திரிஷா, ஆரவ், ரெஜினா | மகிழ் திருமேனி |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]