கோலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகன் ஆக வளம் வரும் நடிகர் அஜித் நடிப்பில் உச்சத்தில் இருந்தாலும் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான “கார் ரேஸிங்” பந்தயத்தில் அவ்வப்போது கலந்து கொண்டு கடந்த காலங்களில் வெற்றி பெற்றும் இருக்கிறார்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் நடிகர் அஜித் துபாயில் நடக்க உள்ள “Dubai 24H Series” பந்தயத்தில் பங்கேற்பதற்காக Ajith Kumar Racing என்ற குழுவை உருவாக்கி அவருடன் சேர்த்து மொத்தம் நான்கு ரேஸர்களை இணைத்துக் கொண்டார். மேலும் அதற்காக எடுக்கும் பயிற்சி காணொளியும் வைரல் ஆனது, அதில் அஜித் பயணித்த கார் விபத்துக்கு உள்ளதும் அதனால் ஏற்பட்ட பதட்டமான சூழலும் பரபரப்பை கிளப்பியது. நிர்வாக குழு நடிகர் அஜித் நலமாக உள்ளார் என்ற உறுதியும் செய்தனர்.
தற்காலிகமாக விலகினார் நடிகர் அஜித்
இன்று Ajith Kumar Racing குழு ஒரு அறிக்கையை வெளியிட்டது அதில் நடிகர் அஜித் “Dubai 24H Series” பந்தயத்தில் இருந்து தற்காலிகமாக விலகுகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நடிகர் அஜித்குமாரின் நலன் மற்றும் ரேஸிங் அணியின் எதிர்கால நோக்கத்தை கருதி தற்காலிகமாக விலகுவதாக கூறியுள்ளனர்.
Ajith sir is racing today. While remaining as the Team Owner for Ajith Kumar Racing, he will be driving for Ajith Kumar Racing by Razoon in a short while.
— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025
“மோட்டர் ஸ்போர்ட் மீது அவர் கொண்டுள்ள அதீத passion காரணமாக இந்த Dubai 24H Seriesல் தொடர்ந்து அணியுடன் பயணிப்பார். Bas Koeten Porsche 992 Cup Car (Number 901)- Ajith Kumar Racingன் உரிமையாளராக, Porsche Cayman GT4 (Number 414) என்ற நிகழ்வில் ட்ரைவர் என இரு வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளார்” – Team Ajith Kumar Racing
414 and 901 both to be cheered. pic.twitter.com/Z921YOiua4
— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025
நடிகர் அஜித்தின் இந்த முடிவு அவரின் ஸ்போர்ட்ஸ்மான்ஷிப்பை வெளிக்காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவு பயிற்சியில் ஏற்பட்ட விபத்தை மையமாக வைத்து மிக நீண்ட யோசனைக்கு பிறகு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com