நடிப்பு என்றால் இவரது அர்பணிப்பிற்கு அளவே இல்லை, நடிப்பிற்காக எந்த வித கஷ்டத்தையும் அனுபவிக்க தயார். இந்தியா சினிமாவில் உச்சம் தொட்ட Kamal Haasan என்ற “நடிப்பின் களஞ்சியம்”…
சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் Kamal-ன் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று. மல்டி ஸ்டார் ஹீரோக்களை வைத்து பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.

Kamal நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் அனைத்து மிக பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டது வருகிறது. தற்போது சங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படம் ரிலீஸ்க்கு காத்துக்கொண்டுள்ளது. 28 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு வெளியாகும் இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
இதன் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. படம் ஜூலை மாதம் வெளியாகிறது.
இந்த படம் இந்தியன் 2 என ஒரு பாகத்தில் எடுக்க முடியாது என்றும் இந்தியன் 3 என்ற மற்றொரு பாகம் வெளிவரும் என கூறியுள்ளனர். இந்தியன் 3 படத்திற்கு பெரும்பாலான காட்சிகள் தற்போதே எடுத்து வைத்துள்ளனர். இந்தியன் 2 ரிலீஸ் ஆனா பிறகு விரைவில் இந்தியன் 3 படமும் வெளிவரலாம்.
கல்கி 2898 AD என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், தீஷா பாட்னி, கமல் ஹாசன், அமிதாப் பச்சன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். சில நொடிகள் மட்டுமே ட்ரைலரில் வரும் கமலின் கெட்டப் மிரட்டும் வகையில் அமைந்துள்ளது.

படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
“நாயகன்”படத்துக்கு பிறகு கமல், மணிரத்னம் மீண்டும் கைகோர்த்திருக்கும் படம் “Thug Life”. இந்த படத்தை “ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்” மற்றும் மணிரத்னத்தின் “மெட்ராஸ் டாக்கீஸ்” ஆகிய நிறுவனங்கள் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” நிறுவனம் மூலம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா கிருஷ்ணன், அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, சன்யா மல்ஹோத்ரா, அசோக் செல்வன் என பலரும் நடித்து வருவதாக தெரிகிறது. ஷூட்டிங் வேலைகள் நடைபெற்று கொண்டும் உள்ளது. ஒரு சில அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கிறது.
கமல் ஹாசன் நடிப்பில் வரவிருக்கும் இந்த மூன்று படங்களும் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையிட காத்துக்கொண்டுள்ளன.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]