Home Cinema News கங்குவா படத்தில் இணையும் நடிகர் கார்த்தி!

கங்குவா படத்தில் இணையும் நடிகர் கார்த்தி!

அண்ணன் சூரியா மற்றும் சிறுத்தை சிவாவுடன் கங்குவா 2வில் இணையும் கார்த்தி!!

by Sruthi Balasubramanian

நடிகர் சூரியா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அக்டோபர் 10 திரையில் வெளியாக தயாராக உள்ள படம் கங்குவா!! மிக பிரமாண்டமாக உருவாகும் Kanguva படம் 2 பாகங்களை உடையது. இரண்டாவது பாகத்துக்கான டீசர் நேற்று சென்னையில் படமாக்கப்பட்டது. நடிகர் கார்த்தியும் இந்த படத்தில் நடிக்கிறாரா என்று கேள்விகள் வளர வளர நேற்று அதற்கான பதில் அனைவர்க்கும் கிடைத்தது! Kanguva பார்ட் 2வில் அண்ணன் சூர்யாவுடன் தம்பி கார்த்தியும் இணைகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

கங்குவா / kanguva 2 karthi suriya

விக்ரம் படத்தில் சிறிது நேரம் தான் சூரியா வந்தார், கார்த்தி அதுவும் வராமல் அவர் குரல் மட்டும் தான் கேட்டது அதற்கே திரையரங்குகள் அதிர்ந்தது. தற்போது இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்றல் என்னவாகுமோ?? Kanguva 2 படத்துக்கான டீசர் Kanguva படத்தின் இறுதியில் இடம்பெறும் என்றும் சொல்லப்படுகிறது. இன்று சூரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான ‘Fire Song’ வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது! கங்குவா படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் படமாக அமையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது!!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.