Home Cinema News 73வது பிறந்தநாள் கொண்டாடும் மெகா ஸ்டார் “நடிகர் Mammootty ”

73வது பிறந்தநாள் கொண்டாடும் மெகா ஸ்டார் “நடிகர் Mammootty ”

மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர் மம்மூட்டியின் 73 வது பிறந்தநாள் இன்று. 53 மூன்று ஆண்டு கால திரை உலக பயணம், 400க்கும் மேற்பட்ட படங்கள், 3 தேசிய விருது, 13 filmfare விருது, 7 கேரளா மாநில விருது, என பல்வேறு சாதனைகளை படைத்து அனைவருக்கும் ஒரு முன்னோடியாக திகழ்கிறார்.

by Shanmuga Lakshmi

மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர் Mammootty’யின் 73 வது பிறந்தநாள் இன்று. 53 ஆண்டு கால திரை உலக பயணம், 400க்கும் மேற்பட்ட படங்கள், 3 தேசிய விருது, 13 filmfare விருது, 7 கேரளா மாநில விருது, என பல்வேறு சாதனைகளை படைத்து அனைவருக்கும் ஒரு முன்னோடியாக திகழ்கிறார்.

கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் சண்டினூர் என்ற கிராமத்தில் இஸ்மாயில் மற்றும் பாத்திமா தம்பதியினருக்கு 1951 செப்டம்பர் 7ஆம் நடிகர் மம்மூட்டி பிறந்தார். பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் முகமது குட்டி பணபரம்பில் இஸ்மாயில் ஆகும். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் ஆவர். நடிகர் மம்முட்டியின் தந்தை ஆடை மொத்த வியாபாரம் மற்றும் அரிசி வியாபாரம் செய்து வந்தார். வீட்டில் மூத்த பிள்ளை என்பதால் அவரது கல்வி படிப்பு முடித்தவுடன் எல்லா பொறுப்புகளும் மம்மூட்டி அவர்களிடம் கொடுக்கப்பட்டது. எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பிறவி 2 ஆண்டுகளாக மஞ்சேரியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். சிறு வயது முதலே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் தனது கல்லூரி காலங்களில் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். 

அந்த முயற்சிகளின் முதல் படியாக 1971 ஆம் ஆண்டு “அனுபவங்கள் பாலிசக்கல்” என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் மிகச் சிறிய கதாபாத்திரம் என்றாலும் தனக்கு பிடித்த நடிப்பு உலகிற்கு வந்து விட்டோம் என்ற மனநிறைவு அவருக்கு கிடைத்தது. மம்மூட்டி அவர்கள் பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து வரும் காரணத்தால் அவர்களின் குடும்பத்தாருக்கு அவர் திரைத்துறையில் பணிபுரிவதில் விருப்பம் இல்லை. 1979 ஆம் ஆண்டு அவரது வாழ்க்கையின் மிக முக்கிய இரண்டு நிகழ்வுகள் நிகழ்ந்தது. முதலாவதாக பெற்றோர்களின் ஆசிர்வாதத்தோடு சுல்பத் அவர்களை திருமணம் செய்தார். இதுவரை அவரது வாழ்வில் எந்த ஒரு பெண்ணுடனும் பேசியதே கிடையாது அதனால் அவரது மனைவியே அவருக்கு முதல் தோழியாகவும், காதலியாகவும் மாறினார். அதே ஆண்டு அந்த காலத்தில் மிகப்பெரிய இயக்குனரான எம் டி வாசுதேவன் நாயர் இயக்கிய “தேவலோகம்” என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரம் நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் பாதியில் கைவிடப்பட்டது. இது அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது இருந்தாலும் நடிப்பின் மீது அவர் கொண்ட தீராத காதலால் பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

1980 ஆம் ஆண்டு அதே வாசுதேவன் நாயர் இன் எழுத்தில் இயக்குனர் ஆசாத் இயக்கிய “வில்க்கானுந்து சுவப்னங்கள்” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. அது அவரது திரை பயணத்திலும் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் இருந்தது. அதன் பிறகு “மேலா” என்ற திரைப்படத்தில் சர்க்கஸில் சாகசம் செய்யும் கதாபாத்திரமாக அவர் நடித்த அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுகளையும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. 

1982 முதல் 1987 ஆம் ஆண்டு வரை மொத்தம் 150 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். இதில் 1986 ஆம் ஆண்டு மட்டும் 35 படங்கள் நடித்து சாதனை படைத்துள்ளார். 

மலையாளத்திலிருந்து தமிழில் முதன்முதலாக 1990ஆம் ஆண்டு “மௌனம் சம்மதம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கே.மது இயக்கத்தில் மம்மூட்டி, அமலா மற்றும் ஜெய்சங்கர் நடித்த இந்த படம் அதே சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான “அதிசய பிறவி”யுடன் மோதியது. விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மௌனம் சம்மதம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 1991 ஆம் ஆண்டு மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் “தளபதி” படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்து அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இன்றளவும் நட்புக்கு உதாரணமாக எடுத்துக்காட்டும் கதாபாத்திரமாக தேவா, சூர்யா விளக்குகின்றனர். 

தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பிற மொழிகளிலும் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார் நடிகர் மம்முட்டி. 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் மம்முட்டி தேசிய விருது, கேரள மாநில விருது, filmfare விருது, என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். சினிமாவில் அவர் ஆற்றிய பங்கிற்காக 1998 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதோடு மலையாள சினிமாவில் மூன்று தேசிய விருதுகள் வாங்கிய ஒரே நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இரட்டை வேடங்களில் மொத்தம் 15 படங்கள் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் பல தொண்டு நிறுவனங்கள் மூலம் பல பேருக்கு உதவி செய்து வருகிறார். 369 என்ற எண்ணின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட காரணத்தால் அவர் வைத்திருக்கும் எல்லா கார்களுக்கும் அதே எண்ணில் நம்பர் பிளேட் உள்ளது. இது மட்டுமல்லாது கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். “கால்ச்சப்படு” என்ற புத்தகத்தையும் நடிகர் மம்மூட்டி எழுதியுள்ளார். இந்திய திரை உலகில் தனிப்பட்ட இணையதளத்தை கொண்ட முதல் நடிகர்களில் இவரும் ஒருவர். “மம்மூட்டி கம்பெனி”, “ப்ளே ஹவுஸ்” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

நடிகர் தயாரிப்பாளர் வழக்கறிஞர் எழுத்தாளர் என்று பல துறைகளில் சாதனைகளை புரிந்தாலும் அனைவரிடமும் நல்ல மனிதனாகவும் நடந்து கொள்ளும் பண்பு அவர் மீதான அன்பையும் மரியாதையையும் ரசிகர்கள் மத்தியில் உயர்ந்து கொண்டே போகிறது.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் டைட்டிலை ரிவியூல் செய்யும் போஸ்ட் அவரின் instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.