Home Cinema News நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகள் இவர்தான்!

நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகள் இவர்தான்!

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு திருநெல்வேலியை சேர்ந்த பெண்ணுடன் வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.

by Sruthi Balasubramanian

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நெப்போலியன். ஏராளமான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய இவர் ஹீரோவாகவும் பல படங்களில் கலக்கியுள்ளார். ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்த நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். 

நெப்போலியன்/ Nepoleon actor

அதில் 4 வயது இருக்கும் போதே தனுஷுக்கு அரிய வகை தசை சிதைவு நோய் ஏற்படவே, அவருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்கா சென்ற நடிகர் Napoleon ஒரு கட்டத்திற்கு மேல் குடும்பத்துடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். தற்போது தனுஷுக்கு 25 வயது ஆன நிலையில்  அவருக்கு திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்ஷயா உடன் திருமணம் செய்ய நெப்போலியன் ஏற்பாடு செய்துள்ளார். இருவருக்கும் வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது

உடல்நல பிரச்சனை காரணமாக தனுஷால் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால்  தனுஷ் அமெரிக்காவிலேயே இருக்க Nepoleon தனது குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு வந்து பெண் வீட்டார் உடன் இணைந்து   நிச்சயதார்தத்தை வீடியோ கால் மூலம் நடத்தி முடித்துள்ளார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.