செப்டம்பர் மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்ட நிலையில் 110 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, 35-திற்கும் மேற்பட்ட மக்கள் இயற்கை எய்தி உள்ளனர். 47,000 மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் மட்டும் 4 லட்சம் மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, ராம் சரண், ஜூனியர் NTR, பிரபாஸ், மகேஷ் பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், நாக அர்ஜுனா, பால கிருஷ்ணா, சாய் தரம் தேஜ், வருண் தேஜ், நன்கொடை வழங்கி உள்ள நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான Simbu’வும் 6 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை அனுப்பியுள்ளார். இதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகரும் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிரஞ்சீவி | 1 கோடி |
பவன் கல்யாண் | 1 கோடி (ஆந்திர பிரதேஷ்)1கோடி (தெலுங்கானா) |
பிரபாஸ் | 1 கோடி (ஆந்திர பிரதேஷ்)1கோடி (தெலுங்கானா) |
ராம் சரண் | 1 கோடி |
அல்லு அர்ஜுன் | 1 கோடி |
ஜூனியர் NTR | 1 கோடி |
மகேஷ் பாபு | 1 கோடி |
நாக அர்ஜுனா | 1 கோடி |
பாலகிருஷ்ணா | 1 கோடி |
சாய் தரம் தேஜ் | 25 லட்சம் |
சித்து ஜோன்னலகட்டா | 30 லட்சம் |
வருண் தேஜ் | 15 லட்சம் |
சிலம்பரசன் | 6 லட்சம் |
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ளப்பெருக்கிற்கு, தமிழ் திரைத்துறையில் இருந்து உதவும் முதல் நடிகர் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]