சினிமாவில் ஸ்டன்ட் கலைஞராக நுழைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் வெங்கல் ராவ். வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்.
தற்போது சொந்த ஊரில் வசித்து வரும் வெங்கல் ராவுக்கு ஒரு கை, ஒரு கால் செயலிழந்து பேச முடியாமல் சிகிச்சை பெற்று வருவதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து வெங்கல் ராவ் மருத்துவ சிகிச்சைக்காக உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
தன்னுடன் இணைந்து பல படங்களில் நடித்த இவருக்கு வடிவேலு இதுவரை எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை. இப்படியான நிலையில் முதல் ஆளாக ஒடி போய் உதவி செய்துள்ளார் சிம்பு. ஆமாம், வெங்கல் ராவ் மருத்துவ செலவுக்காக நடிகர் சிம்பு 2 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.