Home Cinema News அடேங்கப்பா! இவ்ளோவா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய நடிகர் சூரி!

அடேங்கப்பா! இவ்ளோவா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய நடிகர் சூரி!

by Sivaanantham RB

தமிழில் ‘வெண்ணிலா கபடிகுழு, களவாணி, நான் மகான் அல்ல, சுந்தரபாண்டியன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ போன்ற பல படங்களில் காமெடியில் வேற லெவலில் அசத்திய சூரி ஹீரோ ரூட் எடுத்த படம் ‘விடுதலை’.

முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில் சூரி ‘குமரேசன்’ என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி காமெடி ரோலில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டு, சீரியஸ் ரோலிலும், ஹீரோவாகவும் மட்டுமே கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

actor soori 1

இப்போது சூரி கைவசம் ‘விடுதலை பார்ட் 2‘, ‘கொட்டுக்காளி’, ‘கருடன்’, ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய நான்கு படங்கள் உள்ளது. இதில் ‘விடுதலை பார்ட் 2’வின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘கொட்டுக்காளி’ மற்றும் ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய இரண்டு படங்களும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சூரி தான் ஒப்பந்தமாகப்போகும் புதிய படங்களுக்கு ரூ.10 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.