Home Cinema News சூர்யாவின் பேச்சைக் கேட்காதா சுதா கொங்கரா… ‘புறநானுறு’ படத்தில் நடிக்கப்போவது யார்?!

சூர்யாவின் பேச்சைக் கேட்காதா சுதா கொங்கரா… ‘புறநானுறு’ படத்தில் நடிக்கப்போவது யார்?!

சூர்யா நடிக்க வேண்டிய புறநானூறு படத்தில் அவருக்குப் பதில் சிவா கார்த்திகேயன் மற்றும் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

by Sruthi Balasubramanian

சூர்யாவின் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கும் சூரரைப்போற்று படத்தின் ரீமேக்கான் ‘Sarfira’ ஜூலை 12 ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், சூர்யாவுக்கும்- சுதா கொங்கராவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

Suraraipotru hindi sarfira

கடந்த ஆண்டு சுதா கொங்கரா – சூர்யா மீண்டும் இணைவதாகவும் படத்தின் பெயர் ‘புறநானூறு’ என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகி ஓர் ஆண்டாகியும் இன்னும் ஷூட்டிங் போகவில்லை. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சூர்யாவும், சுதா கொங்கராவும் இணைந்தே ‘’புறநானுறு படம் இன்னும் நேரம் கோருகிறது. ஆனால்,நிச்சயம் படம் வெளியாகும்’’ என அறிக்கை வெளியிட்டார்கள். ஆனாலும், படம் பேப்பரில் இருந்து ஷூட்டுக்குப்போகவில்லை. 

புறநானுறு suriya sudha

சூர்யா கதையில் சொன்ன மாற்றங்களை சுதா கொங்கரா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே காரணமாக சொல்லப்படுகிறது. சூர்யா வெளியேறினாலும், தயாரிப்பாளர் சூர்யா இல்லையென்றாலும் ‘புறநானூறு’ கைவிடப்படாது என நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார் இயகுநர் சுதா கொங்கரா. சூர்யாவுக்கு பதிலாக தனுஷ் அல்லது சிவகார்த்திகேயனை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கிறது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.