Home Cinema News தமிழில் ஒரு முறை மட்டுமே சேர்ந்து நடித்த நடிகர்கள்! 

தமிழில் ஒரு முறை மட்டுமே சேர்ந்து நடித்த நடிகர்கள்! 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் ஒரு முறை மட்டுமே சேர்ந்து நடித்துள்ள படங்களின் பட்டியல். 

by Vinodhini Kumar

தமிழ் சினிமாவில் பெயர்ந்து வெற்றி படங்களை கொடுக்க பிரபல நடிகர்கள் இணைந்து நடிப்பது வழக்கம். அப்படி இந்த இரண்டு பிரபல நடிகர்கள் ஒரு முறை மட்டுமே சேர்ந்து நடித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். 

கமல் ஹாசன் – விவேக்

Vivek and Kamal

உலக நாயகன் கமல் ஹாசன் திகைக்க வைக்கும் பாத்திரங்களை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் நடிப்பது போலவே பல வளர்ந்து வரும் இயக்குனர்கள் நடிகர்கள் உடன் நடிப்பதும் வழக்கம். ஆனால் தமிழில் தவிர்க்க முடியாத நடிகரும் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் உடன் ஒரு முறை மட்டுமே நடித்துள்ளார் கமல். 2024ல் வரவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் தான் இருவரும் இணைந்திருப்பது இருவரின் ரசிகர்களுக்கும் ஆச்சரியமான தகவல். 

அஜித் – வடிவேலு

Ajith and Vadivelu

இரண்டு முன்னணி நடிகர்கள், இருவருமே தன்னுடைய தனிப்பட்ட துறையில் பிஸியாக படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் அஜித் குமார் மற்றும் வைகை புயல் வடிவேலு இணைந்து ஒரே ஒரு படத்தில் தான் நடித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும்? 2002ல் வெளியான ‘ராஜா’ படத்தில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அதன் பின் படிக்கவில்லை என்று பேசப்படுகிறது. 

ரஜினிகாந்த் – விவேக்

Rajinikanth and Vivek

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரும்பாலும் அவரின் படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளில் உடன் நடிக்கும் நடிகர்களுக்கு இணையாக காமெடியில் அசத்தியுள்ளார். ஆனால் நடிகர் விவேக் உடன் இயக்குனர் ஷங்கரின் ‘சிவாஜி: த பாஸ்’ படத்தில் தான் முதல் முறையாக காமெடி மற்றும் துணை வேடத்தில் இணைந்திருப்பார்கள். இவர்களின் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அதன் பின் அவர்கள் சேர்ந்து நடிக்க வாய்ப்புகள் அமையவில்லை. 

விஜய் – விஜய்காந்த்

Vijaykanth and Vijay

நடிகர் விஜய் அவரின் திரைப்பயணத்தில் கேப்டன் விஜயகாந்த் உடைய பங்கு முக்கியமானது என ஏற்கனவே கூறியிருப்பார். விஜய்யின் தந்தையும் இயக்குனருமான S A சந்திரசேகர் இயக்கத்தில் 1993ல் ‘செந்தூரபாண்டி’ படத்தில் தான் கடைசியாக இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் S A சந்திரசேகரும் பல நேர்காணலில் அவர் கேட்டுக் கொண்டதால் இந்த படத்தில் கேப்டன் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று கூறியிருப்பார். 

சிம்பு – வடிவேலு

Vadivelu and Simbu

பல இளம் கதாநாயகர்களுடன் நடித்து, அந்த படம் வெற்றியடைய ஆம்பல் இருந்தாலும் அதில் வரும் நகைச்சுவை காட்சிகளால் இன்றும் பேசப்படும் வகையில் நடித்தவர் வடிவேலு. சிம்பு உடன் இதுவரை அவர் 2004ல் வெளிவந்த ‘கோவில்’ படத்தில் மட்டுமே நடித்துள்ளது வியப்பாக உள்ளது. இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளும் ஹிட். 

ரஜினிகாந்த் – ஜோதிகா

நடிகர் ரஜினிகாந்தின் படங்களில் அவருக்கு முன்னுரிமை கொடுத்தாலும் இதுவரை பல இளம் கதாநாயகிகளுடன் நடித்திருப்பார். அப்படி பிரபல நடிகை ஜோதிகா உடன் அவர் ஜோடி சேர்ந்ததே இல்லை என்பது ஆச்சரியமான தகவல். ஆனால் இருவரும் 2005ல் வெளியான ‘சந்திரமுகி’ படத்தில் முக்கியமான வேடங்களை ஏற்து நடித்திருப்பார்கள். படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் இவர்களை வேறு படத்தில் நடிக்க வைக்காதது ஏன் என தெரியவில்லை. 

சிவாஜி – விஜய்

Sivaji ganesan and Vijay in Once More
Source: Reddit- u/-Harrison-Wells-

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் நடிக்கும் பாக்கியமும் அதிர்ஷ்டமும் எல்லாருக்கும் கிடைக்காது. அப்படியிருக்க நடிகர் விஜய் மற்றும் சிவாஜி கணேசன் ஒரு படத்தில் நடித்துள்ளது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும். 1997ல் வந்த ‘ஒன்ஸ் மோர்’ (Once More) படத்தில் இருவரும் நடித்துள்ளார்கள். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.