கோலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான விஷ்ணு விஷாலின் முதல் படம் ‘வெண்ணிலா கபடிகுழு’. இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருந்த இந்த படம் ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்கி மிகப் பெரிய வெற்றிப் படமானது.
இதில் நடிகர் சூரி தான் காமெடி பட்டாசு கொளுத்தியிருந்தார். இந்த படத்துக்கு பிறகு ‘குள்ளநரி கூட்டம், ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, கதாநாயகன்’ ஆகிய படங்களிலும் விஷ்ணு விஷாலும், சூரியும் இணைந்து நடித்திருந்தனர்.
TIME is the answer to everything and everyone..
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) April 9, 2024
Let the positivity flow @sooriofficial na..
Love u appa ….. pic.twitter.com/Yvn28SR31B
அதன் பிறகு 2020-ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷும், ‘வீர தீர சூரன்‘ என்ற படத்தின் தயாரிப்பாளர் V.R.அன்புவேல் ராஜனும் சேர்ந்து தன்னிடம் ரூ.2.70 கோடி மோசடி செய்து விட்டதாக கூறி நடிகர் சூரி போலீஸில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது.
சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. உண்மையில் திரு.சூரி, ‘விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்’-க்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். ‘கவரிமான் பரம்பரை’ என்ற படத்துக்காக 2017-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இந்த நேரத்தில் இதுபற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும் வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும், உண்மையான தகவல்களுடன் இதுபற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்று கூறப்பட்டிருந்தது.
‘Garudan’- Soori மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்த வெற்றி படமா!
தற்போது, 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஏப்ரல் 9-ஆம் தேதி) இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதை சொல்லும் வகையில் விஷ்ணு விஷால் எக்ஸ் பக்கத்தில் சூரி மற்றும் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை சூரியும் ஷேரிட்டு “நடப்பவை எல்லாம் நன்மைக்கே. நன்றிங்க விஷ்ணு விஷால்” என்று பதிவிட்டுள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]