Home Cinema News கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு… வைரலாகும் புகைப்படங்கள்!

கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு… வைரலாகும் புகைப்படங்கள்!

by Sivaanantham RB

கோலிவுட்டில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவரான அமலா பால் ‘மைனா, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன், கடாவர்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்திருக்கிறார்.

இவர் கைவசம் ‘ஆடுஜீவிதம் (The Goat Life), த்விஜா, லெவல் கிராஸ்’ ஆகிய மூன்று மலையாள படங்கள் இருந்தது. இதில் ‘ஆடுஜீவிதம்’ (The Goat Life) படம்  கடந்த மார்ச் 28-ஆம் தேதி திரையரங்குகளில் மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.

இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்திருந்தார். இப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டு ஆடியன்ஸிடமும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே, இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து வாழ்ந்து வந்த அமலா பால், ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை அமலா பால் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது, கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவரே இன்ஸ்டாகிராமில் தெரிவித்ததுடன், சில புகைப்படங்களையும் ஷேர் செய்திருக்கிறார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.