Aditi Rao Hydari ஹைதராபாத்தில் என்ஜினியரான அஹ்சன் ஹைடாரி மற்றும் பாடகி வித்யா ராவ் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். பின்னர் 11 வயதிலேயே லீலா சாம்சன் என்பவரிடம் பரதநாட்டிய நடனம் கற்க தொடங்கினார்.
சினிமா உலகில் முதல் முறை மம்முட்டி நடிப்பில் உருவான பிரஜாபதி என்ற மலையாள படமான மூலம் 2006 -ல் அறிமுகமானார். தமிழ் நாட்டில் கோபி பகுதிக்கு அருகில் படமாக்கப்பட்ட பிரஜாபதி படத்தில் சாவித்ரி என்ற கேரக்டரில் நடித்தார் Aditi Rao Hydari.
அதனை தொடர்ந்து 2007 -ல் தமிழில் சிருங்காரம் என்ற படத்தில் பரதநாட்டியம் சார்ந்த கதையில் நடித்திருந்தார். பின்னர் 2 ஆண்டுகள் இடைவெளியில் ஹிந்தியில் எடுக்கப்பட்ட டெல்லி 6 படத்தில் அபிஷேக் பச்சன், சோனம் கபூர் ஆகியோருடன் நடித்திருந்தார்.
சினிமா வாழ்வில் ஆரம்பமே மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வந்த Aditi Rao Hydari, ஹிந்தி சினிமாவில் 2009 முதல் 2016 வரை முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.
அதிதி ராவ்க்கு பிடித்த இயக்குனராக இருந்து வந்த மணிரத்னம் உடன் 2017 -ல் காற்று வெளியிடை படத்தின் மூலம் ஒன்றாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதில் கார்த்திக்கு ஜோடியாக லீலா ஆபிரஹாம் கேரக்டரில் நடித்து அசத்தினார்.
And here it is 😍…#kaatruveliyidai
— Aditi Rao Hydari (@aditiraohydari) November 11, 2016
Releasing march2017 @Karthi_Offl @MadrasTalkies_ #ManiRatnam @arrahman @sreekar_prasad #RaviVarman pic.twitter.com/GbGkY6Tjtt
இந்தியன் ஏர் ஃபோர்ஸ் அதிகாரியாக இருந்து வரும் கார்த்தி விபத்தில் சிக்கி காயம் அடைந்த சமயம் மருத்துவராக இருக்கும் அதிதி ராவ்வை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இருவருக்கும் இடையேயான காதல் கதையை அழகாக காட்டியிருப்பார்.
அடுத்து 2018 -ல் மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் ஹீரோக்களை வைத்து எடுக்கப்பட்ட செக்க சிவந்த வானம் படத்தில் பவித்ரா கேரக்டரில் நடித்திருந்தார். 2020 -ல் சைக்கோ திரில்லர் படமான சைக்கோ படத்தில் நடித்திருந்தார்.
2021 -ல் சித்தார்த், ஷர்வானந்த், அதிதி ராவ், அணு இம்மானுவேல் ஆகியோர் நடிப்பில் வெளியான மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சித்தார்த் உடன் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
2022 -ல் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சால்மன், அதிதி ராவ், காஜல் அகர்வால், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் ஹே சினாமிகா படம் வெளியானது. இதில் அதிதி ராவ் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என நடித்து வந்த அதிதி ராவ் சமீபத்தில் காதலரான சித்தார்த் உடன் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் கம்மிட் ஆகியுள்ள அதிதி ராவ் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள “காந்தி டால்க்ஸ்” என்ற படத்திலும் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிக்கும் ஊமை படம் ‘Gandhi Talks’ படப்பிடிப்பு முடிந்தது!
டைம்ஸ் -ல் 50 மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் அதிதி ராவ் 2018 -ல் 6-வது இடமும், 2019 -ல் 9-வது இடமும், 2020 -ல் 16-வது இடமும் பிடித்தார். மேலும் “ஹைதராபாத் டைம்ஸ்” -ல் 2018 -ஆம் ஆண்டிற்கான மிகவும் விரும்பத்தக்க பெண்மணி என்ற பெயர் பெற்றார்.
Aditi Rao Hydari நடித்த தமிழ் திரைப்படங்கள்
படங்கள் | நடிகர்கள் | வெளியான தேதி | இயக்குனர்கள் |
சிருங்காரம் | அதிதி ராவ், மனோஜ் K கல்யாண், சசிகுமார் சுப்பிரமணி, YG. மஹேந்திரன் | 5 அக்டோபர் 2007 | சாரதா ராமநாதன் |
காற்று வெளியிடை | கார்த்தி, அதிதி ராவ், ருக்மணி விஜயகுமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், RJ. பாலாஜி, டெல்லி கணேஷ் | 7 ஏப்ரல் 2017 | மணிரத்னம் |
செக்க சிவந்த வானம் | அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் | 27 செப்டம்பர் 2018 | மணிரத்னம் |
சைக்கோ | உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் | 24 ஜனவரி 2020 | மிஸ்கின் |
ஹே சினாமிகா | துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால், யோகி பாபு | 3 மார்ச் 2022 | பிருந்தா |