Home Cinema News 32 ஆண்டுகளுக்கு பிறகு ‘தலைவர் 171’-ல் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கப்போகும் பிரபல நடிகை!

32 ஆண்டுகளுக்கு பிறகு ‘தலைவர் 171’-ல் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கப்போகும் பிரபல நடிகை!

by Santhiya Lakshmi

கோலிவுட்டின் டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ‘வேட்டையன்’ மற்றும் ‘தலைவர் 171‘ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் த.செ.ஞானவேல் இயக்கிக் கொண்டிருக்கும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படம் இந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. 

தலைவர் 171′ படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் டீசரை வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

jpg 3

இந்த படத்துக்கு ‘Eagle’ என டைட்டில் வைத்துள்ளதாகவும், 2013-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘The Purge’ என்ற படத்தை தழுவி தான் லோகேஷ் கனகராஜ் இதை எடுக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் நடிக்க பிரபல நடிகை ஷோபனா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ரஜினி – ஷோபனா இருவரும் ‘சிவா, தளபதி’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.