2006-ல் நடிகர் சூர்யா மூலம் தொடங்கப்பட்டு இன்றுவரை பல ஏழை குழந்தைகளுக்கு கல்வி பெற பல்வேறு வகையில் உதவி வரும் அறக்கட்டளையாக “அகரம் பௌண்டேசன்” இருந்து வருகிறது.
சமீபத்தில் இந்த ஆண்டிற்கான Agaram விருது வழங்கும் விழாவில் சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் கந்து கொண்டு ஒரு சில நல்ல கருத்துக்களை கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான தர்மபுரி மாவட்டத்தில் முதல் தலைமுறை கற்பவர்களுக்கான தலையீட்டுத் திட்டத்தை ஒரு பத்திரிகையாளரும், செயல்பாட்டாளரான ஞானவேல் வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
இதனை அறிந்த சூர்யா எத்தனையோ பகுதிகளில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாமல் இருந்து வரும் பெற்றோர்களுக்காக சூர்யா, ஞானவேல் அவர்களுடன் கைகோர்த்து செப்டம்பர் 25, 2006 அன்று சென்னையில் “அகரம் அறக்கட்டளை” என்ற பெயரில் ” ஆறாம் செய்ய விரும்பு” என்ற கோட்பாட்டில் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்கள்.

2007-ல் செங்கல்பட்டு மாவட்டம், பாலூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியை தத்தெடுத்து பள்ளியில் நூலகம் அமைத்தல், பள்ளிக் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த உதவினர்.
பின்னர் பல உதவிகள் செய்து வந்த Agaram அறக்கட்டளை “விதை” என்ற பெயரில் அகரம் அறக்கட்டளையில் கல்லூரி மாணவர்களின் கல்விக்கு உதவ தகுதியுள்ள மாணவர்களை கண்டறிந்து உதவ முன்வந்தனர்.
இவ்வாறு பல சேவைகள் செய்து வந்த Agaram அறக்கட்டளை ஆண்டுக்கு ஒரு முறை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி உதவி வருகிறது. இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி நடிகர் சூர்யா ஏழை மாணவர்கள் பல கஷ்டங்களை கடந்து எதிர்நிச்சல் போட்டு கல்வியில் சாதித்து வருவது நாங்கள் அடைந்த உயரத்தை விட அதிகம் என்று பாராட்டியுள்ளார்.

விதை திட்டம் மூலம் வருடத்திற்கு 300-500 மாணவர்கள் வீதம் கிட்டத்தட்ட 15 வருடங்களில் 5200 மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவியுள்ளது. ஒவ்வொரு ஏழை குடும்பத்தில் இருக்கும் மாணவர்களின் படிப்பு அந்த குடும்பத்திற்கு வழிகாட்டியாக இருந்து உதவி வருகிறது.
ஏழை மாணவர்களின் கல்லூரிப்படிப்பிற்கு 350 கல்லூரிகள் உதவிசெய்து வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக 40 கல்லூரிகள் தொடர்ச்சியாக உதவி செய்துள்ளது. “விதை” மூலம் கல்லூரியில் படித்த மாணவர்கள் சிறந்த மாணவர்களாக பல சாதனைகள் செய்துள்ளனர்.
இந்த அமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது “விதை” மூலம் பயன்பெற்ற 3000-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தான். எந்த நிலையில் இருந்தாலும் இலக்கு ஒன்றை வைத்து அதனை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். பல ஏற்றதாழ்வுகள் வந்தாலும் இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் பயணிக்க வேண்டும்.
கல்வி என்பதை ஆயுதமாக கொண்டு பல மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்த முடியும். எத்தனையோ கிராமங்களில் சாலைவசதி இல்லாத பகுதியில் இருந்து கூட கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு அகரம் என்று துணை நிற்கும்.
அகரம் அறக்கட்டளையின் ஒரு பகுதியாக நமது பள்ளி, நமது கிராமம், தாய், அகரம் ஹாஸ்டல் என பல பகுதிகளில் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனர்.
அகரம் அறக்கட்டளை தொடங்குவதற்கு முன்பே சிவகுமார் அவர்கள் 1979-ல் தனது 100-வது படத்தை முடித்த பிறகு “Sivakumar Educational & Charitable Trust” என்பதை தொடங்கினார். தமிழகத்தின் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு ஆதரவாக அறக்கட்டளையைத் தொடங்கினார். ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலைத் தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு நிதியுதவி வழங்கும் சேவையை தொடர்ந்து செய்து வந்தார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]