நடிகர் ஜீவா மற்றும் ராஷி கண்ணா நடிக்கும் “Aghathiyaa” திரைப்படம் வரும் 2025ல் ஜனவரி 31 அன்று வெளியாக உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறூவனம் ஆன வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பதிவிற்கு கீழ் படத்தின் கதை மற்றும் அதன் சாராம்சத்தை வெளிப்படுத்தும் விதமாக captionல் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ரகசியம், போர், நம்பிக்கை மற்றும் மீட்பின் கதை”
Aghathiyaa – Angels vs Devil : பா.விஜயின் பாண்டஸி உலகம்
“Strawberry, ஆருத்ரா” படங்களை தொடர்ந்து பா.விஜய் இயக்கும் மூன்றாவது திரைப்படத்திற்கு “Aghathiyaa” என்ற பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாயகனாக நடிகர் ஜீவா மற்றும் நாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளனர். இதற்கு முன் பா.விஜய் இயக்கி வெளியான இரண்டு படங்கள் horror மற்றும் திரில்லர் பின்னணியில் உருவாக்கப்பட்டது.
“Aghathiyaa – Angels vs Devil” திரைப்படம் ஒரு தரமான பாண்டஸி, திரில்லர் படமாக இருக்கும் என்று படக்குழு உறுதி அளித்துள்ளது. இந்த வருடம் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான sci-fi திரில்லர் படமான ‘Black’ பெருவாரியான தமிழ் ரசிகர்களால் கொண்டாடபட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘Aghathiyaa’ திரைப்படமும் சிறப்பான கதைக்களத்துடன் படமாக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aghathiyaa – Angels vs Devil : படக்குழு
இயக்குனர் | பா.விஜய் |
நடிகர்/நடிகை | ஜீவா அர்ஜுன் சார்ஜா ராஷி கண்ணா யோகி பாபு VTV கணேஷ் ரெடின் கிங்ஸ்லீ |
இசை | யுவன் ஷங்கர் ராஜா |
வெளியாகும் நாள் | ஜனவரி 31, 2025 |
மொழி | தமிழ், தெலுங்கு, ஹிந்தி |