Yuvan Sankar Raja –வின் இசை நிகழ்ச்சி கோவையில் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய Yuvan “ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களும் அதற்கான புதிய முயற்சிகள் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். இவை ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன். ரசிகர்கள் இசைக்கான வைப் உணர்வு அதிகம் கொண்டவர்கள், அவர்களின் உணர்வுகள் மூலம் நல்ல பாடல்களை என்னால் நிகழ்ச்சியில் பாட முடிகிறது” என்று கூறியிருந்தார்.
பழைய பாடல்களை ரீமேக் செய்வது தற்போது ட்ரண்ட் ஆக மாறி வருகிறது. ஆனால் அதனை பயன்படும்போது காப்புரிமை பிரச்சனை நிச்சயம் வரும். தற்போதைய தொழில்நுட்ப்பமான AI டெக்னாலஜி வளர்ச்சியால் அடுத்த 10 வருடங்களில் சினிமா துறையில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது. AI தொழில்நுட்பத்தில் உண்மைக் தன்மை இருக்காது என்று AR. ரகுமான் கூறியது உண்மை தான். அவரின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறியிருந்தார். சொல்லப்போனால் AI டெக்னாலஜியை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள், அதனை கொண்டு யார் இசையமைக்க கத்துக்கிறாங்களோ அவங்க தான் வரும் காலங்களில் உச்சத்துக்குப் போவாங்க என்றும் கூறியிருந்தார்.
‘நேசிப்பாயா’ படத்தின் முதல் பாடல் ‘Tholanja Manasu’ வெளியானது!
மேலும் தொடர்ந்து பேசிய Yuvan கோவையில் முதல் முறையாக 360 டிகிரி நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். இந்நிகழ்ச்சி கொடிசியாவில் நடைபெறுகிறது. சென்னையில் வெற்றிகரமாக இது போன்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம்.
கோவையில் நடக்கும் நிகழ்வு மிகவும் முக்கியமானதாக இருக்கும். டிக்கெட் விலை குறித்தும், இசை நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. “யுவன் இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு போதை பொருள் தேவைபடாது ஏனெனில் யுவனின் பாடல்களே ஒரு போதை தான்” என்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் விளையாட்டாக கூறியிருந்தனர்.
AI டெக்னாலஜி வரும் காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. சமீபத்தில் வெளியான GOAT படத்தில் மறைந்த பாவத்தரணியின் குரலில் “சின்ன சின்ன கண்கள்” பாடல் பாடப்பட்டது. தற்போது வேட்டையன் படத்திலும் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை AI தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கொண்டு வந்திருந்திருந்தார்.