Home Cinema News Aishwarya Rajesh-ன் அசரவைக்கும் திரைப்படங்களின் பட்டியல் இதோ!!

Aishwarya Rajesh-ன் அசரவைக்கும் திரைப்படங்களின் பட்டியல் இதோ!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார் “Aishwarya Rajesh”.

by Shanmuga Lakshmi

பொதுவாக இந்திய சினிமாவில் கதாநாயகி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பல வருடங்களாக கட்டமைக்கப்பட்டிருந்த நிலையில், அதை உடைத்து தங்களுக்கான புதிய பாதையை உருவாக்கிக் கொள்ளும் விதமாக பல கதாநாயகிகளில் நடித்த முன்னணி நாயகிகளில் Aishwarya rajesh-உம் ஒருவர். அவரின் எளிமையான தோற்றம், தெளிவான தமிழ் உச்சரிப்பு, தமிழ் சினிமாவை ரசிக்கும் சாதாரண பெண்களை பிரதிநிதித்துவம் செய்யும் விதமாக இருக்கும் அவரின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.

உருவக்கேலி மற்றும் பல விதமான விமர்சனங்கள் நடிகை Aishwarya Rajesh மீது பலரால் ஏவப்பட்டாலும் அதை தன்னம்பிக்கையாக மாற்றிக் கொண்டு தனது திரைப்பயணத்தை 15 வருடங்களுக்கும் மேல் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். பல நடிகைகள் கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் நிலையில், தனது நடிப்பாற்றலை வெளிக்காட்ட உதவுகின்ற சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்த “நம்ம வீட்டு பிள்ளை, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், டக் ஜெகதீஷ், ரன் பேபி ரன்” போன்ற திரைப்படங்கள் குணச்சித்திர மற்றும் துணை கதாபாத்திரமாக அசத்தியிருப்பார். இதனால் இவரின் ரசிகர் பட்டாளம் தமிழில் மட்டும் அல்ல பல மொழிகளில் படர்ந்து உள்ளது.

Aishwarya Rajesh – வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்

தற்போது பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் Aishwarya Rajesh-ன் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் பட்டியலை தெரிந்து கொள்ள தொடர்ந்து வாசிக்கவும்.

1.கருப்பர் நகரம் [தமிழ்]

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வட சென்னையில் நிகழும் சம்பவங்களின் அடிப்படையில் “கருப்பர் நகரம்” படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது. மேலும், அங்கே ஓங்கியிருக்கும் உள்ளூர் அரசியல் அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறெல்லாம் குலைக்கிறது என்பதை ஆழமாக வெளிக்காட்டியுள்ளனர் படக்குழு. 

  • நடிகர்கள் – ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஈஸ்வரி ராவ், JD சக்ரவர்த்தி, ஜான் விஜய்
  • இயக்குனர் – கோபி நயினார் 
  • இசையமைப்பாளர் – KS பிரசாத் 
  • தயாரிப்பு – ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், RR பிலிம் மேக்கர்ஸ்
  • வெளியாகும் நாள் – TBA 

2.மோகன்தாஸ் [தமிழ்]

தமிழ் சினிமாவில் தரமான த்ரில்லர் திரைப்படங்கள் வெளியாவதில் தாமதம் ஆவது வழக்கமாகிவிட்டது. அதே போல் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரில்லர் திரைப்படம் தான் “மோகன்தாஸ்”. இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான டீசர் அடிப்படையில் கதாநாயகன் சற்று தயக்கம் உடைய சுபாவம் கொண்டவர் ஆனால் யாரும் அறியாத அடக்க முடியாத கோபத்தை கொண்டவர். ஒரு சீரியல் கில்லர் போல் காண்பிக்கப்படும் இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது.

  • நடிகர்கள் – விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், ராஜேஷ் கருணாகரன், லல்லு, பிரகாஷ் ராகவன் 
  • இயக்குனர் – முரளி கார்த்திக் 
  • இசையமைப்பாளர் – சுந்தரமூர்த்தி  
  • தயாரிப்பு – விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் 
  • வெளியாகும் நாள் – TBA 

3.தீயவர் குலைகள் நடுங்க [தமிழ்]

Aishwarya Rajesh-ஐ மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரில்லர் இன்வெஸ்டிகேஷன் திரைப்படம், கொடூரமாக நிகழும் கொலைகளை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார். மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளுடன் இருக்கும் ஒரு பெண் கதாபாத்திரமாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா. 2023 ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

  • நடிகர்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜுன் சார்ஜா, தங்கதுரை, ப்ராங்க்ஸ்டெர் ராகுல், அனிகா, G.K.ரெட்டி
  • இயக்குனர் – தினேஷ் லக்ஷ்மணன் 
  • இசையமைப்பாளர் – பரத் ஆசீவகன்
  • தயாரிப்பு – UV Communications 
  • வெளியாகும் நாள் – TBA 

4.உத்தரகாண்டா [கன்னடம்]

இயக்குனர் ரோஹித் படக்கி இயக்கும் ஆக்ஷன் மற்றும் டிராமா திரைப்படம் “உத்தரகாண்டா” வட கர்நாடகாவில் இருக்கும் மிகப்பெரிய காங்ஸ்டர் மக்களின் சேவகனாக உருமாறுகிறான். அதன் பிறகு அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாரா நிகழ்வுகளே படத்தின் திரைக்கதை. 

  • நடிகர்கள் – தனஞ்ஜயா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிவராஜ்குமார், பாவனா மேனன், திகந்த், விஜய் பாபு 
  • இயக்குனர் – ரோஹித் படக்கி 
  • இசையமைப்பாளர் – சரண் ராஜ், அமித் திரிவேதி 
  • தயாரிப்பு – KRG ஸ்டுடியோஸ் 
  • வெளியாகும் நாள் – TBA 

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.