Home Cinema News Ajith மற்றும் Trisha காம்போவில் ஹிட் அடித்த படங்கள்…

Ajith மற்றும் Trisha காம்போவில் ஹிட் அடித்த படங்கள்…

Ajith-திற்கு ஜோடியாக Trisha நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிக்கும் படியாகவும், வசூல் ரீதியாக ஹிட் அடித்தும் இருந்துள்ளது. 

by Sudhakaran Eswaran

Ajith-திற்கு ஜோடியாக Trisha நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிக்கும் படியாகவும், வசூல் ரீதியாக ஹிட் அடித்தும் இருந்துள்ளது. 

Ajith படத்திற்கு பெரும்பாலும் ஹீரோயின்கள் முக்கிய ரோல்களிலோ நடித்து வந்துள்ளனர். காதல் என்பதை தாண்டி படத்தில் ஹீரோயின்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தந்து பெயர் சொல்லும் கேரக்டரில் நடிப்பார்கள். பில்லா, விஸ்வாசம், வில்லன், என்னை அறிந்தால் போன்ற படங்களில் ஹீரோயின் கேரக்டர் முக்கியமான இருந்தது.  

அந்த வகையில் Trisha-வுடன் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

ஜி:

Ji movie Ajith and Trisha

2005-ல் முதன் முதலில் Ajith-திற்கு ஜோடியாக Trisha, ‘ஜி’ படத்தில் நடித்திருந்தார். கல்லூரி மாணவனாக அஜித்தும், பள்ளி மாணவியாக த்ரிஷாவும் நடித்திருந்தனர். லிங்குசாமி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் படம் வெளியானது. பாடல்கள் ரசிக்கும் படியாகவும் இருந்தது. அரசியல் சார்ந்த படமாக உள்ளது.  

கிரீடம்:

Kireedam movie Ajith and Trisha

A.L. விஜய் இயக்கத்தில் 2007-ல் வெளியான படம் கிரீடம். Ajith, Trisha, ராஜ்கிரண், விவேக், சரண்யா பொன்வண்ணன், சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். போலீஸாக இருக்கும் ராஜ்கிரண் தனது மகன் அஜித்தையும் போலீஸ் ஆஃபீஸ்ர் ஆக வேண்டும் என்று நினைப்பார். பல பிரச்சனைகளை தண்டி அப்பாவின் கனவை நிறைவேற்றினாரா என்பது தான் கதை. GV. பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தனர். 

மங்காத்தா:

Mankatha movie

வெங்கட் பிரபுவின் மாஸ்டர் பிஸ் படமான மங்காத்தாவில் 3-வது முறை Ajith, Trisha இணைந்து நடித்தனர். ipl -ல் நடைபெறும் பெட்டிங் நிகழ்வை வைத்து பல கோடி ருபாய் கைமாற்றப்படுகிறது. அதை அஜித் மற்றும் அவரது நண்பர்கள் கொள்ளையடித்து விடுகின்றனர். ஆனால் சொல்லப்போனால் அதற்க்கு பிறகு தான் படத்தின் ட்விஸ்ட். அஜித் நடிப்பு, வசனம் என படம் முழுவதும் மிரட்டியிருப்பார். யுவன் இசையில் bgm மாஸாக இருந்தது. அஜித்தின் 50-வது படமாக மங்காத்தா இருந்தது. அஜித், த்ரிஷாவின் காதல் காட்சிகள் ரசிக்க வைத்தது. 

என்னை அறிந்தால்:

Ennai Arinthal movie

அஜித், கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் சூப்பர் ஹிட் ஆன படம் என்னை அறிந்தால். போலீஸ் அதிகாரியான அஜித், த்ரிஷாவை சந்திக்கும் நிகழ்வில் Trisha-வை மிக அழகாக காட்டியிருப்பார். கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே ஹீரோயின்களுக்கு சற்று கூடுதலாக முக்கியத்துவம் தரப்படும். அந்த வகையில் திரிஷா கதைக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் கலக்கியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தன.   

விடா முயற்சி:

Vidaa Muyarchi movie

தற்போது அஜித் நடித்து வரும் படம் விட முயற்சி. இதில் ஹீரோயின் ஆக திரிஷா நடித்து வருகிறார். அஜித், திரிஷா கூட்டணி 5-வது முறையாக இணைந்து நடக்கும் போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. 

அஜித் மற்றும் விஜய்யின் அடுத்து வரும் படங்களில் திரிஷா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இரு பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திரிஷா த்ரிஷாவின் மார்க்கெட் குறையவில்லை என்றே சொல்லலாம்.  

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.