Home Cinema News ஒரே நேரத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘Good Bad Ugly’ படங்களில் நடித்துவருகிறார் அஜித் குமார்! 

ஒரே நேரத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘Good Bad Ugly’ படங்களில் நடித்துவருகிறார் அஜித் குமார்! 

நடிகர் அஜித் குமார் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். 'விடா முயற்சி' மற்றும் 'Good Bad Ugly' படங்களில் தொடர்ந்து நடித்து பிசியாக உள்ளார். 

by Vinodhini Kumar

இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் அஜித் குமார், வித்தியாசமான கதையில், புது இயக்குனர்களுடன் தற்போது பணியாற்றி வருகிறார். 

விடாமுயற்சி poster

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 2023 முதல் உருவாக்கி வருகிற படம் ‘விடாமுயற்சி‘. நடிகர் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, Bigg Boss ஆரவ் நடித்துள்ள இந்த படம், அசர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு முடித்து தற்போது இந்தியாவில் காட்சிப்படுத்துகிறார்கள். 

‘Good Bad Ugly’ படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியாகி வைரல்! 

நடிகர் அஜித் குமாரின் ரசிகர்களுக்கு பல மாதங்களாக ஒரு சின்ன அப்டேட் கூட இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இப்போது இந்த படத்துடன் ‘Good Bad Ugly’ படத்திலும் நடித்து வருகிறார். கடந்த வாரம் ஹைதராபாதில் இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் நடந்ததாகவும், அதில் நடிகர் அஜித் தொடர்ந்து இரண்டு படங்களிலும் நடித்தார் என்றும் தகவல் வெளியானது. 

Good Bad Ugly poster

2024ல் ஒட்டுமொத்தமாக ‘விடாமுயற்சி‘ மற்றும் ‘Good Bad Ugly’ படங்களின் அப்டேட்டும் தொடர்ந்து வருவது தான் ரசிகர்களுக்கு கிடைத்த பெரிய ட்ரீட். இந்த இரண்டு படங்களிலும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் அஜித், இரண்டு ஷூட்டிங்கிலும் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.