Home Cinema News ஐதராபாத்தில் Ajith… 25 ஆண்டுகளுக்குப்பிறகு Good Bad Ugly அஜித்துடன் இணையும் நடிகர்?

ஐதராபாத்தில் Ajith… 25 ஆண்டுகளுக்குப்பிறகு Good Bad Ugly அஜித்துடன் இணையும் நடிகர்?

நடிகர் ajithkumar நடிக்கும் Good Bad Ugly படத்தின் ஷூட்டிங் மே 6-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்காக அஜித் ஐதரபாத் செல்கிறார். அஜித்துடன் நடிக்கும் மற்ற நடிகர்களும் ஐதரபாத் வந்து இறங்கியிருக்கிறார்கள்.

by Santhiya Lakshmi

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துவரும் நிலையில், இந்தப்படம் ஷுட்டிங் முடிவதற்கு முன்பாகவே Good Bad Ugly படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க டேட்ஸ் கொடுத்திருக்கிறார். ‘மார்க் ஆண்டனி’ படம் மூலம் சீரியஸ் இயக்குநராக உருவெடுத்திருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன ட்ரிப்பிள் ரோல் கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போக உடனே ஷூட்டிங்கை தொடங்கச்சொல்லியிருக்கிறார்.

Sj Surya

அஜித்தின் அன்புக்கட்டளையால் ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகளை முடித்து ஷூட்டிங் போக தேதி குறித்துவிட்டார் ஆதிக். இதன்படி Good Bad Ugly படத்தின் ஷூட்டிங் நாளை மறுநாள் அதாவது மே 6-ம் தேதி தொடங்குகிறது. படத்தில் அஜித்துடன் ‘அனிமல்’ படத்தில் தலையில் மது பாட்டிலை வைத்து நடனமாடி வைரல் ஆன பாபி தியோல் வில்லனாக நடிக்க இருக்கிறார். இத்தோடு முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார்.

கொண்டாடப்படும் Tamil cinema Villain-கள்!

எஸ்.ஜே.சூர்யாவை 25 ஆண்டுகளுக்கு முன்னர் ‘வாலி’ படம் மூலம் இயக்குநராக சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அஜித். அதன்பிறகு இருவரும் இணைந்து பணியாற்றாமலே இருந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப்பின்னர் இருவரும் Good Bad Ugly படத்தின் மூலம் இணைய இருக்கிறார்கள். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.