தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றி படங்களை தருவதில் மட்டும் நேரம் செலுத்தாமல் தன்னுடைய தனிப்பட்ட ஆசைகள் மற்றும் மற்ற திறமைகளை வெளிப்படுத்தி, நேர்த்தியாக வாழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார்.
அவருக்கு Race கார்கள் மீதான காதல் பற்றிய சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நேற்று நடிகர் அஜித் புதிதாக ஒரு Sports காரை வாங்கியுள்ளதை அவரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித் குமார் தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
நடிகை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் புதிய Porsche காருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “He’s got the Car, the STyle and my HEART❤️” என்ற Caption உடன் வெளியிட்டுள்ளார். அவரின் ரசிகர்கள் இந்த பதிவிற்கு comment செய்து ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
அஜித் வாங்கிய Porsche கார் தகவல்கள்
நடிகர் அஜித் தஹ்ரபோது வாங்கியுள்ள கார், பிரபல sports கார்கள் தயாரிக்கும் நிறுவனமான Porsche உடைய 2023ம் ஆண்டு வெளியான கார் ஆகும். Porsche 911 GT3 RS என்ற மாடலில் வெள்ளை நிறத்திலுள்ள கார் தான் இப்போது அஜித் சொந்தமாக்கியுளார்.




இந்த Porsche 911 GT3 RS மாடல் இந்திய மதிப்பின்படி 3.5 கோடி ரூபாய் விலையில் இந்த கார் தற்போது விற்கப்படுகிறது. இந்த கார் வெறும் 3.2 வினாடிகளில் 0 km/h – 100 km/h வேகம் போகக்கூடியது. அதிகபட்சம் 296 km/h வேகம் செல்லக்கூடிய கார் தான் தற்போது அஜித் வாங்கியுள்ளார்.
இந்த Porsche 911 GT3 RS மாடல் காரை கடந்த மே மாதம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா வாங்கியிருந்தார். அதற்கு பிறகு இந்த காரை வாங்கியுள்ள சினிமா பிரபலம் நடிகர் அஜித் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]