நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2025ல் வெளியாக தயாராகும் Good Bad Ugly படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது.
Good Bad Ugly- நடிகர் அஜித் குமார் தனது மற்றோரு பரிணாமத்தை இந்த படத்தில் காட்டி உள்ளது படத்தில் first லுக் போஸ்டர் வழியாக தெரிகிறது. இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு கூலான கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் நடிப்பது உறுதியாகி உள்ளது. கையில் டாட்டூ போட்டு மூன்று வேடங்களில் போஸ்டரில் இருக்கிறார், மேலும் இந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் இதுவரை அஜித் குமாரை ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.
Expect the unexpected!#GoodBadUgly In Cinemas Pongal 2025 🔥
— Suresh Chandra (@SureshChandraa) May 19, 2024
Shooting in Progress!
#AjithKumar @MythriOfficial @Adhikravi @ThisIsDSP @AbinandhanR @editorvijay @GoodBadUglyoffl @supremesundar #Kaloianvodenicharov #Anuvardhan @valentino_suren @Donechannel… pic.twitter.com/NELBY9jNFt
இந்த படத்தின் முதல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியானது. அதிரடியான போஸ்டரில் ரத்தம் வடிய முள் வேலிகள், துப்பாக்கிகள் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு, தற்போது இந்த போஸ்ட்டரை ரிலீஸ் செய்துள்ளனர். Good Bad Uglyன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி படத்தை பற்றி பெரிதாக அப்டேட் எதும் வராத நிலையில் இந்த படத்தின் அப்டேட் கிடைத்திருப்பது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் நடிகர் அஜித்தை புதிய வேடத்தில் பார்ப்பது வித்தியாசமான கதையில் வித்தியாசமான பாத்திரமாக இருக்கும் என ஆவலாக உள்ளது.

Good Bad Ugly படத்தை இயக்குவது தனது வாழ்ககையில் மிக பெரிய கனவு என்றும், அவர் பார்த்து வியந்த நடிகர் அஜித் குமாரை இயக்குவது பெரிய வாய்ப்பு என்றும் இந்த வாய்ப்பிற்கு தயாரிப்பாளர்கள் நவீன் ஏர்னெனி மற்றும் ரவி ஷங்கர்-க்கு நன்றி என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது வலப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த படத்தின் இசை, பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அஜித், எஸ் ஜே சூர்யாவை தவிர வேறு யார் யார் நடித்துளார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை. மேலும் பல அப்டேட்கள் வெளியானால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]