“தன்நம்பிக்கை நாயகன் Ajith” என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது அவரது கடின உழைப்பு மட்டுமே. படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் நம்பிக்கை தரக்கூடிய வகையில் அனைவருக்கும் ரோல் மாடலாக இன்றுவரை இருந்து வருகிறார்.
90-களில் நடிக்க வந்தது முதல் இன்று வரை தனது படங்களில் உடல் மொழி, நடிப்பு, பேச்சு, நடை என ரசிகர்கள் ரசிக்கும் படியான முன்னணி ஹீரோவாக Ajith இருந்து வருகிறார்.
“அமராவதி” மூலம் கரியரை தொடங்கி பெண்களின் “ஆசை” நாயகனாகவும், “மைனர் மாப்பிள்ளையாகவும்” ஜொலித்து “அட்டகாசமான” நடிப்பில் “அமர்க்களமாக” வளம் வந்து சிறந்த “சிட்டிசன்” என்று “வரலாறு” படைத்து “வீரம்”, “விவேகம்”, “வலிமை”, “துணிவு” கொண்டு தனது “விடா முயற்சி” மூலம் தமிழ் சினிமாவில் “தல” மேல் “கிரீடம்” சூட்டாத “ராஜாவாக” இருந்து வருகிறார்.
Ajith நடிப்பில் வெளிவரும் படங்களில் பெரும்பாலும் பன்ச் டயலாக்குகள் பெரிய அளவில் ஃபேமஸ் ஆகும். அப்படி பேசிய சில மாஸ் டயலாக்குகள்…
காதல் நாயகனாக வளம் வந்த Ajith முதன் முதலில் தீனா படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக கலக்கினார். அஜித்திற்கு தல என்ற பட்டமும் அந்த படத்தில் தான் வழங்கப்பட்டது.
தீனா:

“உடம்புல கை இருக்கும், கால் இருக்கும், மூக்கு இருக்கும், முழி இருக்கும். ஆனா உசுரு இருக்காது பாத்துக்கோ…”
அஜித் மாஸ் ஹீரோவாக பேசிய இந்த வசனம் ரசிகர்கள் “தல” என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.
சிட்டிசன்:

தீனாவை தொடர்ந்து மற்றுமொரு சூப்பர் ஹிட் படமான சிட்டிசனில் “நான் தனி ஆள் இல்லை” என்று கூறும் வசனம் அஜித்தின் பின்னாள் இருக்கும் ரசிகர் கூட்டத்தை குறிப்பிட்டு பேசியதை போல அவரின் ரசிகர்கள் கொண்டாடினர்.
ரெட்:

மக்களின் குரலாக ரெட் படத்தில் “அது” என்று உணர்ச்சியில் பேசும் வசனம் இன்று வரை அஜித்தின் பேர் சொல்லும் டயலாக்காக இருந்து வருகிறது.
அசல்:
மாறுபட்ட தோற்றத்தில் அசல் படத்தில் நடித்த அஜித் “வாய் தப்பு செஞ்ச கண்ணு கட்டிகொடுத்திரும்” என்று எதார்த்த உண்மையை மாஸ் ஆக கூறியிருப்பார்.
பில்லா 1 மற்றும் பில்லா 2:

அஜித்தின் சினிமா வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்றால் அது பில்லா. அதில் சாதாரணமாக பேசிய ” I AM BACK” என்ற வசனம் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
“என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும். ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுகுனது டா…” என்று பேசிய டயலாக் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் தன்னை உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்று உந்துகோலாக இருந்தது. தன் வாழ்க்கை தன் கையில் உள்ளது என்பதை புரிந்துகொள்ளும் டயலாக்காக உள்ளது.
“என் நண்பனா இருக்க எந்த தகுதியும் ,தேவை இல்லை, ஆனால் எதிரியா இருக்க தகுதி வேணும்.”
“நாம வாழணும்னா யார வேணாலும் எத்தனை பேர வேணும்னாலும் கொல்லலாம் தப்பில்ல” என்று மாஸாக பேசியிருப்பார்.
“உட்கார்ந்து வேலை வாங்குரவனுக்கும் தன் உயிரை பணயம் வச்சு வேலை செய்ரவனுக்கும் வித்தியாசம் இருக்கு அப்பாசி”
மங்காத்தா:

அஜித்தின் அடுத்த மாஸ்டர் பீஸ் என்று கொண்டாடும் படம் மங்காத்தா. “நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கறது” என்று பேசும் எதார்த்த டயலாக் தியேட்டரில் விசில் பறந்தது.
“Money, Money, Money, Money, ummaah” என்ற வசனம் அல்டிமேட் என்றே கூறலாம்.
“AM THE KING MAKER” என்ற வசனமும் படத்திற்கு ஏற்றாற்போல மாஸ் ஆக இருந்தது.
ஆரம்பம்:

“சாவுக்கு பயந்தவனுக்கு தான் தினம் தினம் சாவு, பயபடாதவனுக்கு ஒரு தடவ தான் சாவு” என்று தன்னம்பிக்கை தரக்கூடிய வசனத்தை பேசியிருப்பார்.
ஆரம்பம் படத்தில் டயலாக் எதுவும் பேசாமல் சாதாரணமாக வரும் Ajith ஸ்டைல் எத்தனை முறை பார்த்தாலும் மாஸாகவே இருக்கும்.
வீரம்:

என் ஆள தொடனும்னா, என்ன தாண்டி தொட்ரா பாக்கலாம்…
“நம்ம கூட இருக்குறவங்களா நாம பாத்துகிட்டா நம்ம மேல இருக்குறவன் பாத்துக்குவான்” என்று கூட அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட அஜித்தின் பெருந்தன்மையை காட்டுகிறது.
என்னை அறிந்தால்:

“ஒரு மெல்லிசான கோடு, கோட்டுக்கு இந்த பக்கம் நா நல்லவன், அந்த பக்கம் நா கெட்டவன்” என சூழ்நிலையை கருதி நல்லவனாகவும், கெட்டவனாகவும் இருந்து வருகிறோம் என்று கூறுகிறார்.
வேதாளம்:
“காசுக்காக என்ன வேணுனாலும் செய்வேன்… அதே தன்மானத்துக்கு ஒரு பிரச்சனனா என் தலையே போனாலும் விடமாட்டேன்”. காசு, பணத்தை தன்மானம் தான் என்று கூறியிருப்பார்.
விவேகம்:
“இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது…”. “Never Ever Give Up”.
அஜித் படத்தில் பேசும் மாஸ் டயலாக்குகள் ஒரு பக்கம் விசில் பறந்தாலும் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை அனைவருக்கும் சொல்லும் விதமாகவே இருந்து வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]