அஜித் குமார் என்றவுடன் சிறந்த நடிகர் என்பதை தாண்டி அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்தது அவர் ஒரு பைக் மெக்கானிக் என்பது தான். சிறு வயதில் பைக் மெக்கானிக்காக இருந்து தனது விட முயற்சி மூலம் தற்போது இந்தியா சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக இருந்து வருகிறார். பெரும்பாலான நடிகர், நடிகைகள் பட ஷூட்டிங் முடித்து விட்டு குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதற்க்கு விதி விளக்காக நடிகர் அஜித் பட ஷூட்டிங் இருக்கும் போதே நேரம் கிடைத்தால் பைக்கை எடுத்துக்கொண்டு ஜாலி டிரிப் கிளம்பி விடுவார். கிடைத்த நேரத்தில் ஆண்டிற்கு 2,3 முறை தனது நண்பர்களுடன் பைக் ரைடிங் சென்று வருகிறார்.

ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வமாக இருந்து வருகின்றனர். அந்த விஷயத்தில் அஜித்திற்கு பைக் ரைடிங் செல்வதில் மிகவும் ஆர்வம். படத்திலும் அவ்வப்போது பைக்கில் சாகச காட்சிகளில் நடிக்கும் பொது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மங்காத்தா படத்தில் பைக் சாகச காட்சியில் நடிக்கும் பொது பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அதை தொடர்ந்து வலிமை படத்தில் பைக் சண்டை காட்சிகள் அற்புதமாக இருந்தது. பைக் ரைடிங் செல்லும் Ajith அவ்வப்போது புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார்.
பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்ட அஜித் மோட்டார் பைக் ரைடிங் கம்பெனி ஒன்றை கடந்தாண்டு தொடங்கியுள்ளார். 2023 மே 22-ஆம் தேதி ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் அதிகாரபூர்வமாக கம்பெனி ஒன்றை தொடங்கினார். இதில் உள்நாடு வெளிநாடு பைக் ரைடிங் செல்பவர்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இளைஞர்கள் மத்தியில் பைக் ரைடிங் என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறுகிய இடைவெளியில் ரேஸ் வைப்பது, நீண்ட தூரம் ரைடிங் செல்வது மற்றும் தனது பைக்கை தனக்கு பிடித்தமாறி மாற்றி அமைப்பது என பல வகையில் பைக் மீது ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.

துணிவு படத்தை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனியின் விடா முயற்சி படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதில் திரிஷா, ரெஜினா, பிரியா பவானி சங்கர், சஞ்சய் தத் அர்ஜுன் தாஸ், ஆரவ் என பலரும் நடித்து வருவதாக செய்திகள் வந்துள்ளது. கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறு சிறு இடைவேளை விட்டு ஷூட்டிங் செய்து வந்த படக்குழு ஷூட்டிங் முடிந்து இந்தாண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனது நண்பர்கள், சக நடிகர்களுடன் மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு பைக் ரைடிங் சென்றுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பைக் ரைடிங் போனது பற்றி தனது கனவு நிறைவேறியதாக ஆரவ் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். அஜித் பைக் ரைடிங் செய்வதில் ஆர்வம் என்பதால் விலை உயர்ந்த பைக்கள் வாங்கி வைத்துள்ளார். பி எம் டபள்யூ எஸ் 1000 ஆர் ஆர் என்ற பைக் 24 லட்சம். இது அஜித்திடம் உள்ள விலையுயர்ந்த பைக் ஆகும். அப்ரிலியா கபோனோர்ட் 1200 என்ற பைக் 20 லட்சம் மதிப்பு கொண்டது. மேலும் சில மதிப்பு மிக்க பைக்குகள் வாங்கி வைத்துள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]