தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்துவரும் அஜித்குமார் பைக், கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஷூட்டிங் இல்லாத சமயம் நண்பர்களுடன் ஜாலியாக பைக்கில் ட்ரிப் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சில சமயம் ஷூட்டிங்கின் போது கூட கார், பைக் ஓட்டும் வீடியோ வைரலாகும். இந்தளவு பைக், கார் பந்தயத்தில் விருப்பம் ஏற்பட முக்கிய காரணமே சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மெக்கானிக்காக பணியாற்றியது தான்.
மேலும் Ajithkumar சமீபத்தில் வாங்கிய ஆடி காரில் 234 கி.மீ வேகத்தில் சென்று அதனை வீடியோவாக வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார். இந்தியாவில் பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக அஜித்குமார் இருந்து வருகிறார். கொரோனா காலத்தில் அண்ணா பல்கலைகழகம் வானூர்தி துறை மாணவர்களுடன் இணைந்து ’தக்ஷா’ என்ற ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டு வந்திருந்தார்.
அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது X பக்கத்தில் துபாய் ஆட்டோட்ரோமில் அஜித்குமார் ஃபெராரி 488 EVO காரில் டெஸ்டிங்கில் ஈடுபட்ட வந்ததை வெளியிட்டு ஐரோப்பா கார் பந்தய சீசனுக்கு அஜித்குமார் தயாராகி வருகிறார் என்பதை உறுதிப்படுத்தினார்.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான “Snakes And Ladders” த்ரில்லர் வெப் சீரிஸ்.
சுரேஷ் சந்திராவின் மற்றொரு X பதிவில், “அஜித்குமார் ரேஸிங் அணி” என்று புதிய கார் ரேஸிங் அணியை அஜித் உருவாக்கியுள்ளதை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம். அஜித்குமார் இதற்கு முன்பு 2004 Formula Asia BMW F3 Championship மற்றும் 2010 Formula 2 Championship ஆகிய பந்தயங்களில் பங்கேற்றுள்ளார்.
புதிதாக உருவாக்காப்பட்டுள்ள பந்தய அணிக்கு ஃபேபியன் என்பவர் கார் ஓட்டுநராக இருப்பார். புதிய ரேஸிங் அணி ஐரோப்பிய தொடரில் பங்கேற்கும்” என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து கார் பந்தயத்திற்கு அஜித் தயாராவது போல் இருக்கும் புதிய ஸ்டைலிஷான போட்டோக்களையும் வெளியிட்டிருந்தார். ரேஸ் பைக் பின்னணியில் இருக்கும்படியான புதிய செல்ஃபி வீடியோவை அஜித்குமார் வெளியிட்ட நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது.
அஜித் குமாரின் புதிய ரேஸிங் அணி வரும் காலங்களில் பல்வேறு சர்வதேச கார் பந்தயங்களில் ஈடுபடவுள்ளது. மேலும் 24hseries, porsche ஐரோப்பிய சீரிஸ், 992 GT3 cup பிரிவில் பங்கேற்கும். இதனால் திறமையான இளம் ரேஸர்களுக்கு வாய்ப்பு கிடைத்து அவர்களுக்கு முழு ஆதரவு தரப்படும் வகையில் இந்த கார் ரேஸிங் அணியின் நோக்கமாக இருக்கும் என தெரிகிறது.
அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் ’விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’குட் பேட் அக்லி’ ஆகிய படங்கள் திரைக்கு வர காத்திருக்கும் நிலையில் மீண்டும் கார் பந்தயத்தில் இறங்கியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.