கமல்ஹாசனின் Thuglife, விஜய்யின் ‘Greatest of All Time’ என ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கும் கலாசாரத்தின் தொடர்ச்சியாக அஜித்தின் அடுத்தப்படமும் ‘Good Bad Ugly’ என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப்படத்தை இயக்குகிறார். த்ரிஷா இல்லைனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் விஷால் – எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மார்க் ஆண்டனி’ படம் மூலம் தன் திறமையை கோலிவுட்டில் அழுத்தமாக நிரூபித்தார்.
மார்க் ஆண்டனி படத்தை மிகவும் ரசித்த அஜித் ஆதிக்கிடம் கதைக் கேட்க, ‘Good Bad Ugly’ படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார் ஆதிக். டைட்டில் படியே இதில் மூன்று அஜித். ஒருவன் நல்லவன், ஒருவன் கெட்டவன், ஒருவன் அசிங்கமானவன். இதில் அஜித்துக்கு ஜோடியாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தின் மூலம் புகழ்பெற்ற ஶ்ரீ லீலாவும், முக்கிய கதாபாத்திரத்தில் 90’ஸ் நாயகிகளான சிம்ரனும், மீனாவும் நடிக்க இருக்கிறார்கள்.
படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்குகிறது. இதன் ஒரு கால்ஷீட்டை முடித்துவிட்டுத்தான் மகிழ் திருமேனி இயக்கிவரும் விடாமுயற்சி படத்துக்கு அடுத்த டேட்ஸைக் கொடுத்திருக்கிறார் அஜித்.
மே 1 ஒற்றை அப்டேட் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு டபுள் அப்டேட் கொடுக்க இருக்கிறார் தல.