அஜித் குமார் நடிப்பில் விருவிருப்பாக படமாக்கப்படும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் பின்னணி வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் ஆக்ஷன் படம் ‘விடாமுயற்சி’. இதில் நடிகர்கள் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் நடித்துள்ளனர்.
The big update #vidaamuyarchi shoot resumes #Azerbaijan.
— Suresh Chandra (@SureshChandraa) June 24, 2024
#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran@trishtrashers @akarjunofficial@anirudhofficial @ReginaCassandra @Aravoffl #OmPrakash @DoneChannel1 @vidaamuyarchii
@gopiprasannaa pic.twitter.com/pQ33FDUXCS
இந்த படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் வெகு விரைவாக நடந்து வருகிறது. படத்தில் அதிரடியான சண்டை மற்றும் கார் சேஸிங் காட்சிகள் இருப்பதை BTS வீடியோவாக பதிவிட்டுள்ளார் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா. க்ரேன் இயந்திரம் கொண்டு ஆபத்தான காட்சிகள் உருவாகும் விதத்தை வீடியோவாக வெளியிட்டனர். நீண்ட இடைவேளைக்கு பின் அசர்பைஜானில் ஷோட்டிங் நடந்துவருகிறது.
இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இடையில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவருகிறார். ‘விடாமுயற்சி’ படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]