
அஜீத்குமார் துணிவு படத்திற்கு பிறகு த்ரிஷா உடன் நடிக்கும் படம் விடாமுயற்சி இதனை மகிழ் திருமேனி இயக்கிவருகிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது இதன் காரணமாக விடாமுயற்சி படத்தை சிறந்த படமாக கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமீபத்தில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.
படம் ஏப்ரல் அல்லது மே திரைக்கு வரும் என மகளால் எதிர்ப்பாக பட்டது ஆன அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. ஆனால் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்திற்காக update’ஐ எதிர்பார்த்து கொண்டிருந்த சமயம் ஒரு அதிர்ச்சி செய்தி பரவியது.
அதாவது அஜித்துக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் காதின் பின்புற நரம்பில் சிறிய அறுவை சிகிச்சை முடிந்தது சில வாரங்கள் அவர் ஓய்வு எடுக்கவிருப்பதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது. அதேசமயம் மார்ச் மாதம் கடைசியில் அஜித் ஷுட்டிங்கில் கலந்த்கொள்ள வய்ப்பிருப்பதாகவும் பல செய்திகள் பரவியது.
விடாமுயற்சி படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் இன்று காலை வெளியானது. ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கி தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் மார்க் ஆண்டனி படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.
ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ‘மங்காத்தா’… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான ரசிகர்கள்!
நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் இவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் அதிதீவிர ரசிகர். விடாமுயற்சி படத்திற்குப் பின் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் புதிய தகவல் வெளியாகியிருந்தது.
With Wholesome Humbleness herewith, we Announce the title of AK's Next Movie Called as #GoodBadUgly #AjithKumar @Adhikravi @ThisIsDSP @AbinandhanR @editorvijay @GoodBadUglyoffl@SureshChandraa @supremesundar#kaloianvodenicharov #Anuvardhan @valentino_suren@Donechannel… pic.twitter.com/EU4qKO5fEO
— Mythri Movie Makers (@MythriOfficial) March 14, 2024
தற்போது, இப்படத்தின் பெயர் குட் பேட் அக்லி (Good Bad Ugly) அறிவிப்பு இன்று மாலை வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என பட குழுவிரனார் அறுவித்துள்ளனர். 10 வருடங்களுக்கு பிறகு அஜித் நடிக்கும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதையடுத்து அஜித் ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தன்னம்பிக்கை நாயகன்… விடாமுயற்சியோடு சினிமாவில் ஜெயித்த தல Ajithkumar
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]