நடிகர் அஜித்குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துவரும் ‘விடாமுயற்சி’ பரபரப்பான க்ளைமேக்ஸ் கட்டத்தை எட்டிவருகிறது. அஜித்துடன் இந்தப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 30 அன்று வெளியிட்டது லைகா. தீபாவளி ரிலீஸ் என்கிற அறிவிப்பு இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் வெளியாகும் என எல்லோரும் எதிர்பார்க்க ரிலீஸ் தேதியை மட்டும் கமிட் செய்யவில்லை லைகா.
Presenting the much-awaited first look of #VidaaMuyarchi 🤩 Brace yourselves for a gripping tale where perseverance meets grit. 🔥🎬#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl… pic.twitter.com/ABtDSoM46S
— Lyca Productions (@LycaProductions) June 30, 2024
சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் ‘விடாமுயற்சி’ அப்டேட் கேட்கப்பட, ‘’விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்-த்ரிஷா இருவரும் கணவன் மனைவியாக நடித்து வருகிறார்கள். திரையில் இருவருக்குமான அன்னியோன்யம், ரொமான்ஸ் சிறப்பாக இருக்கும்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். அத்தோடு படத்தில் அஜித் செம ‘ஷார்ப்’பான கேரெக்டரில் நடித்து இருப்பதாகவும் சொல்லியிருகிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]