Home Cinema News ‘GOOD BAD UGLY’யில் வில்லனாக மிரட்டப்போகும் அஜித்தின் சூப்பர் ஹிட் பட இயக்குநர்!

‘GOOD BAD UGLY’யில் வில்லனாக மிரட்டப்போகும் அஜித்தின் சூப்பர் ஹிட் பட இயக்குநர்!

'குட் பேட் அக்லி'யில் அஜித்தை வைத்து சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குநர் ஒருவர் வில்லனாக நடிக்கப்போகிறாராம்.

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கைவசம் ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்கள் இருக்கிறது. இதில் ‘குட் பேட் அக்லி’ படத்தை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது.

Good Bad ugly SJ Surya

கடந்த ஆண்டு (2023) வெளியாகி வேற லெவல் ஹிட்டான ‘மார்க் ஆண்டனி’யின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இப்படத்தை இயக்குகிறாராம். இதில் அஜித் ட்ரிபிள் ஆக்ஷனில் நடிக்கப்போகிறார். 

அஜித்துக்கு எதிரான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கவிருக்கிறார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங் வருகிற ஜூன் 13-ஆம் தேதி முதல் தொடங்கப்போகிறதாம்.

தற்போது, இந்த படத்தில் இன்னொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1999-ஆம் ஆண்டு அஜித் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்த ‘வாலி’ படத்தை இயக்கியிருந்தது எஸ்.ஜே.சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.