கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கைவசம் ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்கள் இருக்கிறது. இதில் ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனியும், ‘குட் பேட் அக்லி’யை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்குகின்றனர்.
![ரீ-ரிலீஸாகும் அஜித்தின் 'மங்காத்தா'... ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான ரசிகர்கள்! 2 Mangatha](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/04/GLXZF57XIAAOPzR-749x1024.jpeg)
‘விடாமுயற்சி’யின் புதிய ஷெட்யூல் ஷூட்டிங் அடுத்த வாரத்தில் இருந்து வெளிநாட்டில் தொடங்கப்போகிறது. ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்திலிருந்து தான் ஆரம்பமாகப்போகிறது.
இந்நிலையில், அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வேற லெவல் ஹிட்டான ‘மங்காத்தா’ படத்தை வருகிற மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 1 அஜித்தின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’வில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், ஆண்ட்ரியா, ஜெயப்பிரகாஷ், பிரேம்ஜி, ராய் லக்ஷ்மி, வைபவ், மஹத், அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு, அஷ்வின் ககுமனு ஆகியோர் நடித்திருந்தார்கள்.