Home Cinema News ‘குட் பேட் அக்லி’ படத்துக்காக அஜித்துக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘குட் பேட் அக்லி’ படத்துக்காக அஜித்துக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்ளோ தெரியுமா?

by Naveen Dhayalan

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் கைவசம் ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘விடாமுயற்சி’ படத்தை இயக்குநர் மகிழ் திருமேனியும், ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்குகிறார்கள்.

GIogInhawAA033K

‘குட் பேட் அக்லி’யில் அஜித் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறதாம். ஷூட்டிங்கை வருகிற ஜூன் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு ரூ.163 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இதற்கு அபிநந்தன் இராமானுஜம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகுமாம்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.