Home Cinema News ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விடாமுயற்சி’யின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த அஜித்!

ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விடாமுயற்சி’யின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த அஜித்!

'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸுக்காக அஜித் ரசிகர்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக ஒரு குட் நியூஸ் வெளியாகியிருக்கிறது.

by Santhiya Lakshmi

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் கைவசம் ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடி வருகிறார்.

இந்த படத்தை ‘தடையறத் தாக்க, தடம்’ புகழ் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதில் வில்லன் கதாபாத்திரங்களில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், ‘பிக் பாஸ்’ ஆரவ் நடித்து வருகிறார்களாம்.

Untitled design 50

இதற்கு 2K கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கிறார், நீரவ் ஷா – ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கின்றனர், என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை அதிக பொருட்செலவில் சுபாஸ்கரனின் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மே 1-ஆம் தேதி ‘தல’ அஜித்தின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.