Home Cinema News அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ டிஜிட்டல் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘நெட்ஃப்ளிக்ஸ்’?

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ டிஜிட்டல் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘நெட்ஃப்ளிக்ஸ்’?

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை 'நெட்ஃப்ளிக்ஸ்' அதிக விலைக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

by Sivaanantham RB

டோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படமான ‘புஷ்பா 2: தி ரூல்’-ன் ஷூட்டிங் டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது.  இப்படத்தை அதிக பொருட்செலவில் இயக்கி வருகிறார் சுகுமார்.

Pushpa 2

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியது. தற்போது, இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ நிறுவனம் ரூ.275 கோடிக்கு கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், மிக முக்கிய கதாபாத்திரங்களில் ஃபஹத் ஃபாசில், தனஞ்செய், ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா பரத்வாஜ், அஜய் கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை இந்த ஆண்டு (2024) ஆகஸ்ட் 15-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.