படத்தின் தேதி தள்ளிப்போவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது உண்மையாகவே Pushpa 2 படம் தாமதமாக வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Pushpa 1 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள Pushpa 2 படத்திற்கு முதல் பாகத்தை போலவே தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
#Pushpa2TheRule in cinemas from December 6th, 2024. pic.twitter.com/BySX31G1tl
— Allu Arjun (@alluarjun) June 17, 2024
படத்தின் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு மிக அதிகரித்துள்ளது. சமீபத்தில் பாடலுக்கான மேக்கிங் வீடியோ வெளியானது. இதற்க்கு முன்பு வரை ஆகஸ்ட் 15-ம் தேதி “Pushpa 2 தி ரூல்” படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
புஷ்பா 2 படத்தின் அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங்குகள் விறுவிறுப்பாக நடந்த வண்ணம் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இருந்தாலும் படத்தின் வேலைகள் முழுமையாக இன்னும் முடிக்கப்படவில்லை என ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் புஷ்பா படக்குழுவினர் அல்லு அர்ஜுன் தலையில் துணியை கட்டிக்கொண்டு வாள் வைத்து இருப்பதுபோல மிரட்டும் வகையில் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் டிசம்பர் 6, 2024 அன்று படம் ரிலீஸ் ஆகும் என்று தேதியை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இது தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் Pushpa 2 படத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஆனது. மேலும் டிசம்பர் மாதம் வெளியாகும் படத்திற்கு அவ்வப்போது மிரட்டல் அப்டேட் தந்து ரசிகர்களை வைஃப் செய்ய வைப்பார்கள் என நம்பலாம்.
படத்தின் முதல் பாகத்தில் சிவப்பு சந்தன மரக்கடத்தலை மையமாகக் கொண்டு கதை அமைந்தது. 2-வது பாகத்திலும் அதே கதையை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளை கொண்டு கதை அமைந்ததாக கூறப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள், பாடல், டீசர் போன்றவை வெளியாகி எதிர்பார்ப்பு அதிகரித்தது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]