டோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன் கைவசம் ‘புஷ்பா 2: தி ரூல்’ மற்றும் இயக்குநர் அட்லீ இயக்கும் படம் என 2 படங்கள் மட்டுமே உள்ளது.
இதில் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ‘ஸ்ரீ வள்ளி‘ என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்று (ஏப்ரல் 5-ஆம் தேதி) ராஷ்மிகாவின் பர்த்டே என்பதால், அவரின் கேரக்டர் போஸ்டரை இப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Wishing the 𝒏𝒂𝒕𝒊𝒐𝒏'𝒔 𝒉𝒆𝒂𝒓𝒕𝒕𝒉𝒓𝒐𝒃 'Srivalli' aka @iamRashmika a very Happy Birthday 🫰🏻#Pushpa2TheRuleTeaser on April 8th 🔥#PushpaMassJaathara 💥#Pushpa2TheRule Grand Release Worldwide on 15th AUG 2024.
— Mythri Movie Makers (@MythriOfficial) April 5, 2024
Icon Star @alluarjun @aryasukku #FahadhFaasil… pic.twitter.com/yh0DAIkn1e
இப்போஸ்டர் ராஷ்மிகாவின் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
முன்னணி இயக்குநர் சுகுமார் இயக்கி வரும் இதில் வில்லனாக ஃபஹத் ஃபாசில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் டீசரை வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதியும், படத்தை ஆகஸ்ட் 15-ஆம் தேதியும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]